விமானத்தில் வழங்கிய உணவில் செத்துக் கிடந்த கரப்பான் பூச்சி.. சாப்பாட்டில் கை வைத்த பயணிக்கு பயங்கர அதிர்ச்சி.

ஏர் விஸ்தாரா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவை ஆர்டர் செய்த விமான பயணி அதற்கான புகைப்படத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


 

Cockroach in the food served on the plane.. Terrible shock for the passenger.

ஏர் விஸ்தாரா விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உணவை ஆர்டர் செய்த விமான பயணி அதற்கான புகைப்படத்தை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

பொதுவாக ரயில்  மற்றும் விமானங்களில் பயணிப்போர் அங்கு கிடைக்கும் உணவுகளை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர். ஆனால் பல நேரங்களில் பயணத்தின் போது கொடுக்கப்படும் உணவுகள் தரமற்றதாகவும், சுகாதாரமற்ற தாகவும் இருந்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது. சில நேரங்களில் பார்சல் செய்து தரப்படும் உணவுகளில் பல்லி,  கரப்பான் பூச்சி,  பாம்பு தலை போன்றவை இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவங்களும் நடந்துள்ளது. இந்த வரிசையில் அகமதாபாத்தைச் சேர்ந்த  நிகுல் சோலங்கி ஏர் விஸ்தாரா  விமானத்தில் பயணம் செய்தார். 

Cockroach in the food served on the plane.. Terrible shock for the passenger.

இதையும் படியுங்கள்:  கறிவேப்பிலையில் இருக்கும் மகத்துவம்- தெரிஞ்சா இனி ஒதுக்கிவைக்கமாட்டீங்க..!

அவர் எங்கிருந்து எங்கு சென்றார் என்ற விவரத்தை பதிவிடவில்லை, ஆனால் சோலங்கி ஏர் இந்தியா விமானத்தில் தான் சந்தித்த கசப்பான அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ஏர் இந்தியா விமானத்தில் ஆடர் செய்த இட்லி சாம்பார், உப்புமாவில் சிறிய கரப்பான் பூச்சி இறந்து கிடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கான புகைப்படங்களையும் அவர் அதில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படங்களை பகிர்ந்த பத்து நிமிடத்தில் ஏர்  விஸ்தாரா விமான நிறுவனம் அவருக்கு பதில் அளித்துள்ளது. அதில், வணக்கம் நிகுல், எங்களின் அனைத்து உணவுகளும்  மிக உயர்ந்த தரத்தை மனதில் வைத்து தயாரிக்கப்படுகிறது.

உங்கள் விமான விவரங்களை எங்களுக்கு நேரடி மெசேஜ் மூலம் அனுப்பி வையுங்கள். உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு இதே போன்ற ஒரு சம்பவம் பூர்வா எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்தது.  ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில்  இறந்த நிலையில் பல்லி கிடந்தது. அதை அந்த பயணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அதை ரயில்வே அமைச்சருக்கு புகார் செய்தார். இதனையடுத்து அது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது. தற்போது விஸ்தாரா விமானத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனமான விஸ்தாராவை முழுவதுமாக ஏர் இந்தியாவுடன் இணைக்க டாட்டா குழுமம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அறிவித்துள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பங்குகள் தொடர்பாக டாட்டா நிறுவனம் பேச்சுவார்த்தை நடந்தி வருவதாகவும், இன்னும் சில விதிமுறைகளில் உடன்பாடு எட்டப்படாததால் அது தற்போது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஸ்தாராவில் டாட்டா குழுமம் 51 சதவீத பங்குகளையும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் 49 சதவீத பங்குகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படியுங்கள்:  குட்நியூஸ்.. தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 உதவித்தொகை.. வெளியான முக்கிய அறிவிப்பு..!

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios