Asianet News TamilAsianet News Tamil

கடலோர மாவட்ட மக்களே உஷார்..!! அடுத்த 24 மணி நேரத்தில் என்ன நடக்கப் போகிறது தெரியுமா..??

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Coastal District People Ushar, Do you know what is going to happen in the next 24 hours .
Author
Chennai, First Published Sep 26, 2020, 1:20 PM IST

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யும். 

Coastal District People Ushar, Do you know what is going to happen in the next 24 hours .

அடுத்த 48 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும். 

Coastal District People Ushar, Do you know what is going to happen in the next 24 hours .

கடந்த 24 மணி நேரத்தில் திருமயம் (புதுக்கோட்டை) 10 சென்டி மீட்டர் மழையும், தேவகோட்டை (சிவகங்கை) 9 சென்டி மீட்டர் மழையும், திருப்பத்தூர் (சிவகங்கை) 8 சென்டி மீட்டர் மழையும், அரிமளம்  (புதுக்கோட்டை),அம்பத்தூர் (திருவள்ளூர்) தலா 6 சென்டி மீட்டர் மழையும், புதுக்கோட்டை,  பள்ளிப்பட்டு (திருவள்ளூர்) தலா  5 சென்டி மீட்டர் மழையும், காரைக்குடி (சிவகங்கை), வாடிப்பட்டி (மதுரை), மருங்காபுரி(திருச்சி) தலா 4 சென்டி மீட்டர் மழையும், ஈரோடு, வேடசந்தூர்  (திண்டுக்கல்),  சூளகிரி (கிருஷ்ணகிரி), உதகமண்டலம் (நீலகிரி), சுலாங்குறிச்சி  (கள்ளக்குறிச்சி) தலா 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios