காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் டெல்லியில் அதன் தலைவர் நவீன்குமார் தலைமையில் இன்று  நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் பிரதிநிதிகள் பங்கேற்றனர். 

அந்த கூட்டத்தில் ஆகஸ்ட் மாதம் கர்நாடகா திறக்க வேண்டிய காவிரி நீர் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.  ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் காவிரி ஒழுங்காற்று குழு தலைவர் நவீன்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். 

அப்போது கர்நாடக அணைகளில் இருந்து அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.   நீர்வரத்து குறைவாக இருப்பினும் கிருஷ்ணராஜ சாகர், கபினியில் இருந்து நீர்திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் நவீன்குமார் தெரிவித்தார்.
கடந்த முறை நடைபெற்ற கூட்டத்தில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் கூட்டங்கள் அனைத்தும் பெங்களூருவில் நடைபெற வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தியது. 

ஒழுங்காற்றுக்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெற்றால் தான் அணையின் நீர் இருப்பு, பராமரிப்பு உள்ளிட்டவை முழுமையாக தெரிய வரும் என வலியுறுத்தியது. ஆனால் தமிழக அரசின் கோரிக்கை இதுவரை ஏற்றுக்கொள்ளப்படவில்லை.