எம்ஜிஆர் ஆட்சியில் சுகாதார துறை அமைச்சராக இருந்த எச்சரிக்கை.வி.ஹண்டே தற்போது பாஜகவில் இருக்கிறார் . அவர் இன்று அப்போலோ வந்து முதல்வருக்கு அளிக்கும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முதல்வருக்கு அளிக்கப்படும் சிறப்பு பிசியோதெரபி சிகிச்சை காரணமாக 10 நாளில் வீடு திரும்புவார் என்று தெரிவித்தார்.

முன்னாள் அமைச்சர் டாக்கர் எச். வி. ஹாண்டே கூறியதாவது: அப்பலோ வந்து முதல்வர் உடல்நிலை குறித்து துணை சபாநாயகர் தம்பிதுரையிடம் கேட்டறிந்தேன். இன்றைக்கு மனநிறைவடைந்தேன்.

முதலமைச்சர் அம்மா நல்ல குணமடைந்து வருகிறார்கள். புரட்சித்தலைவருக்கு பெராலிஸ் வந்தபோது பயிற்சி நிறைந்த மருத்துவர்களான சௌத்கொரிய மருத்துவர்கள் சிகிச்சை அளித்து நடக்க முடியாது என நினைத்தவர்களுக்கு மத்தியில் நடந்து வந்தார். 

தற்போது அதே போல் சிங்கப்பூர் இரண்டு பெண் மருத்துவர்கள் முதலமைச்சருக்கு பிசியோதெரப்பி சிகிச்சை அளித்து வருகிறார்கள். அதனால் அவர் முழு உடல்நலத்தோடு விரைவில் ஒருவாரத்திலோ அல்லது பத்து நாட்களிலோ வீடு திரும்புவார்கள். இவ்வாறு ஹண்டே தெரிவித்தார் .