குமரி மீனவர்களை மீட்க தூதரக அளவில் நடவடிக்கை தேவை... வெளியுறவுத்துறை அமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

ஓமன் நாட்டில் சிக்கி தவிக்கும் குமரி மீனவர்கள் 8 பேரை மீட்க தூதரக ரீதியில் நடவடிக்கை தேவை என மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

cm stalin wrote letter to jaishankar to take action regarding kumari fishermans

குமரி மீனவர்கள் 8 பேரை மீட்க தூதரக ரீதியில் நடவடிக்கை தேவை என ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.இதுக்குறித்த அவரது கடிதத்தில், ஓமன் நாட்டில் சிக்கித்தவிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களை மீட்க தூதரக அளவிலான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும்.

இதையும் படிங்க: அதிமுக வழக்கில் அதிரடி திருப்பம்.. இனிமே இவர்தான் எல்லாம் - இபிஎஸ் Vs ஓபிஎஸ் !

ஓமன் நாட்டின் மஸ்கட் நகரில் மீன்பிடித் தொழிலுக்கு சென்ற கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 8 மீனவர்களின் விசா காலாவதியானதாலும், ஓமன் நாட்டவரால் அவர்களுக்கு ஊதிய நிலுவைத் தொகை வழங்கப்படாததாலும் தாயகம் திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

இதையும் படிங்க: இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்க திமுக அரசு காத்திருக்கிறது ? சீமான் ஆவேசம் !

அவ்வாறு சிக்கித் தவிக்கும் மீனவர்களை மஸ்கட்டிலிருந்து திருப்பி அனுப்புவதற்கான ஏற்பாடுகளை விரைவுபடுத்த தூதரக அளவில் தேவையான அனைத்து உதவிகளை வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios