ரூ.6,000 நிவாரணத் தொகை டோக்கன் கிடைக்கவில்லையா? அப்படினா உடனே இதை செய்யுங்கள்..!

சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும்.

CM Stalin will start the relief amount of Rs. 6,000 today tvk

மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்பட 4 மாவட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரண தொகை வழங்கும் பணியை இன்று சென்னை வேளச்சேரி முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்;- மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6000/- (ரூபாய் ஆறாயிரம் மட்டும்) வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை வழங்க ஏதுவாக டோக்கன்கள் வீடுவீடாக சென்று விநியோகிக்கப்பட்டு வருகிறது. டோக்கன்கள் கிடைக்கப்பெற்றவர்கள், அதில் குறிப்பிட்ட தேதியிலும், நேரத்திலும், குறிப்பிட்டுள்ள நியாய விலைக் கடைக்கு சென்று ரூ.6000/- பெற்றுக்கொள்ளளாம். டோக்கன்கள் கிடைக்கப்பெறாத மற்றும் குடும்ப அட்டை இல்லாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நியாய விலைக் கடைகளில், அதற்கென உரிய படிவத்தினை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

தமிழ்நாடு முதலமைச்சர் இன்று சென்னை, வேளச்சேரி, அஷ்டலட்சுமி நகரில் உள்ள நியாய விலைக் கடையில் காலை 10.00 மணிக்கு மிக்ஜாம் புயல் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6,000/- நிவாரணத் தொகை வழங்கி தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மற்ற நியாய விலைக்கடைகளில் காலை 10.15 மணிக்கு நிவாரணத் தொகை வழங்கப்படும். அடுத்து வரும் நாட்களில், நியாய விலைக் கடைகளில் முற்பகல் 9.00 மணி முதல் 1.00 மணி வரையும், பிற்பகல் 2.00 மணி முதல் 5.00 மணி வரையும் நிவாரணத் தொகை மற்றும் படிவம் வழங்கப்படும்.

இதையும் படிங்க;- ரூ.6000 வெள்ள நிவாரணம் டாஸ்மாக் கடைக்கு சென்றுவிடக்கூடாது!குடிமகன்களுக்கு செக் வைக்க அன்புமணி கொடுக்கும் ஐடியா

மேற்படி நிவாரணத் தெகை பொதுமக்களுக்கு எவ்வித புகாருக்கும் இடமின்றி வழங்கிடவும், புகார் எழும் சூழலில், அதனை உடனுக்குடன் சம்பந்தப்பட்ட அலுவலர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு நல்கிடவும் ஏதுவாக சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் அமைந்துள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அலுவலகத்தில் இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை கட்டுப்பாட்டு அறை செயல்படும். பொதுமக்கள் நிவாரணத் தொகை குறித்த தங்களது சந்தேகங்களை 044-2859 2828 மற்றும் 1100 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் வாயிலாகவும் தொடர்பு கொண்டு கேட்டறியலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios