CM Stalin: ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று மாலை சந்திக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. என்ன காரணம் தெரியுமா?
மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக உச்சநீதி மன்றம் ஆளுநர் முதலமைச்சரும் பேசி ஒரு முடிவை எட்ட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது.
மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக இன்று மாலை 5 மணிக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு இடையேயான மோதல் உச்சம் பெற்றுள்ளது. இதன் காரணமாக தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பாக வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து ஆளுநரின் செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்திருந்து. இதனையடுத்து தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
இந்த மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் கொடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார்.இது தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பாக ஆளுநரும் முதல்வரும் சந்தித்து பேசி ஒரு முடிவை எட்ட வேண்டுமென அறிவுறுத்தி இருந்தது. இது தொடர்பான ஆளுநர் தரப்பிலிருந்து சந்திக்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், மழை நிவாரண பணிகள் நடைபெற்று வந்ததால் கடந்த சில நாட்களாக சந்திக்க முடியாத நிலை இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக ஆளுநரை இன்று மாலை 5 மணிக்கு சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அப்போது மசோதாக்கள் நிலுவையில் உள்ள விவகாரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்த உள்ளனர். மேலும் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்கவுள்ளதால் ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.