எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார்.. அமைச்சர் சேகர்பாபு வேற லெவல்!

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்துள்ள பலநூறு ஆண்டுகள் பழமையான சுவர் கடும் மழையால் இடிந்து விழுந்தது.  இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தியாகராஜர் கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். 

CM Stalin will be present like kandan...minister sekarbabu

கொரோனா தொற்றின் காரணமாகத்தான் முதல்வர் மக்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுத்து வருகிறார் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் கமலாலயக் குளத்தின் தென்கரையில் அமைந்துள்ள பலநூறு ஆண்டுகள் பழமையான சுவர் கடும் மழையால் இடிந்து விழுந்தது.  இதன் காரணமாக, அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த இந்துசமய அறநிலைய துறை அமைச்சர் சேகர்பாபு தியாகராஜர் கோவிலுக்கு சென்று பார்வையிட்டார். 

இதனையடுத், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர்பாபு;- முதல்வரின் உத்தரவுபடி விரைவில் இடிந்த பகுதி சரி செய்யப்படும் என்று கூறினார். இந்த குளத்தில் இருமுறை சுவர் சரிந்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்த குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள சுவரை வல்லுநர்கள் குழு வைத்து ஆராய்ந்து போதிய அளவு நிதியை பெற்று நிரந்தரமாக சரிசெய்ய வேண்டும் என முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சரி செய்யப்படும் என்று கூறினார்.

CM Stalin will be present like kandan...minister sekarbabu

ஓடாத 65 தங்கத் தேர் 49 வெள்ளி தேர்கள் இந்த ஆட்சியில் ஓட விடப்பட்டுள்ளது. எங்கு அபயக்குரல் கேட்டாலும் கந்தன்போல் அங்கு முதல்வர் காட்சி தருவார் என்று கூறினார். திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்தவுடன் தமிழகத்திலிருந்து வெளிமாநிலங்கள், வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருக்கும் சிலைகள் மீட்கப்பட்டிருப்பது குறித்தும் சிலை கடத்தலை தடுத்திருப்பது தொடர்பாகவும் விவரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios