பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். முன்னதாக ஏழு மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா மற்றும் ஆடை பூங்காக்கள் அமைக்கப்படும் மாநிலங்களின் பெயர்கள் விரைவில் மத்திய அரசால் அறிவிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சமீபத்தில் தெரிவித்து இருந்தார். அதன்படி, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? தேதியை அறிவித்தது அதிமுக தலைமை!!

மத்திய அமைச்சரவை அனுமதியளித்த இருந்த நிலையில் இந்த அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. PM MITRA மெகா ஜவுளிப் பூங்காக்கள் 5F (Farm to Fibre to Factory to Fashion to Foreign - பண்ணை முதல் ஃபைபர் முதல் ஃபேக்டரி முதல் ஃபேஷன் முதல் வெளிநாட்டு வரை) என்ற அளவுகோலில் ஜவுளித் துறையை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தை தேர்வு செய்ததற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நான் சட்டப்பேரவையில் பேச திமுக அரசு அனுமதிக்குமா? வானதி சீனிவாசன் கேள்வி!!

இதுக்குறித்த அவரது டிவிட்டர் பதிவில், பிரதமர் மித்ரா பூங்காவிற்கு தமிழகத்தின் விருதுநகர் மாவட்டத்தை தேர்வு செய்ததற்காக பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இது தென் தமிழ்நாட்டின் ஜவுளித் துறைக்கு ஒரு பெரிய ஊக்கமாக இருக்கும். எங்கள் SIPCOT-க்கு 1052 ஏக்கர் நிலம் உள்ளது மற்றும் எங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Scroll to load tweet…