அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது? தேதியை அறிவித்தது அதிமுக தலைமை!!

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

admk general secretary election will be held on mar 26 announced party head

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்துள்ளது. இதுகுறித்து அதிமுக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக சட்ட திட்ட விதி: 20 (அ); பிரிவு - 2ல் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, கழகப் பொதுச் செயலாளர் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற விதிமுறைக்கு ஏற்ப கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் அட்டவணைப்படி நடைபெறும். 

இதையும் படிங்க: திருச்சி சிவாவை நேரில் சந்தித்தார் அமைச்சர் கே.என்.நேரு... ஆதரவாளர்கள் மோதல் சம்பவம் குறித்து பேச்சுவார்த்தை!!

வேட்பு மனு தாக்கல் தொடங்கும் நாள் 18.03.2023 (சனிக்கிழமை) (காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ), வேட்பு மனு தாக்கல் கடைசி நாள் 19.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) (பிற்பகல் 3 மணி வரை), வேட்பு மனு பரிசீலனை 20.03.2023 (திங்கட்கிழமை) (காலை 11 மணி), வேட்பு மனு திரும்பப் பெறுதல் 21.03.2023 (செவ்வாய்கிழமை) (பிற்பகல் 3 மணி வரை), வாக்குப் பதிவு நாள் 26.03.2023 (ஞாயிற்றுக்கிழமை) (காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை), வாக்கு எண்ணிக்கை 27.03.2023 (திங்கட்கிழமை) (காலை 9 மணி முதல்)

இதையும் படிங்க: ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த தமிழக வீரர் மேஜர் ஜெயந்தின் மரணம் வேதனையளிக்கிறது! கமல்ஹாசன் இரங்கல்!

கழகப் பொதுச்செயலாளர் பொறுப்பிற்குப் போட்டியிட விரும்புவோர், கால அட்டவணைப்படி, தலைமைக் கழகத்தில் கட்டணத் தொகை 25,000 ரூபாய் செலுத்தி விருப்ப மனுக்களைப் பெற்று, கழக சட்ட விதி - 20அ; பிரிவு - 1, (a), (b), (c) ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளைப் பின்பற்றி தங்களுடைய விருப்ப மனுக்களைப் பூர்த்தி செய்து தலைமைக் கழகத்தில் வழங்கலாம்.  கழகப் பொதுச் செயலாளர் பொறுப்பிற்கான தேர்தல் முறையாக நடைபெறுவதற்கு, கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் அனைத்து நிர்வாகிகளும், கழக உறுப்பினர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios