எதிர்கட்சியாக இருந்தபோது Go Back Modi என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுக தற்போது ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் தயவு தேவைப்படுகிறது. தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பு ஏற்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாட்டில் நடக்கும் அவலங்களுக்கு திமுக, அதிமுக இரு கட்சிகளும்தான் பொறுப்பு. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகிவிட்டன. அவர் இன்னும் எத்தனை நாட்களுக்கு அதிமுகவையே குறை சொல்லிக்கொண்டு இருக்கப்போகிறார்? என பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த்துடன் இணைந்து பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தொண்டர்களை சந்தித்து புத்தாண்டு வாழ்த்துக் கூறினார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரேமலதா;- தமிழகத்தில் நடக்கும் அனைத்து அவலங்களுக்கு அதிமுக, திமுகதான் பொறுப்பு. மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து 8 மாதமாகிவிட்ட நிலையில் எத்தனை நாள் கடந்த ஆட்சியையே குறை சொல்லிக் கொண்டிருப்பார். திருவொற்றியூர் கட்டட விபத்தை பார்வையிடச் செல்லாத முதலமைச்சர், திரு.வி.க நகருக்கு திமுக உறுப்பினர் சேர்க்கைக்காக நேரில் சென்றது தவறான முன்னுதாரணம். முதலமைச்சர் பொறுப்பில் இருப்பவர் இப்படியான செயலில் ஈடுபட கூடாது.

எதிர்கட்சியாக இருந்தபோது Go Back Modi என்றவர்கள் மோடியுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்பது அரசியல். எல்லாவற்றையும் மக்கள் பார்த்து கொண்டிருக்கிறார்கள். திமுக தற்போது ஆட்சியில் இருப்பதால் மத்திய அரசின் தயவு தேவைப்படுகிறது. தேமுதிகவில் செயல் தலைவர் பொறுப்பு ஏற்படுத்துவது குறித்து மாவட்ட செயலாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். யாரை செயல் தலைவராக்குவது என தொண்டர்கள் மற்றும் விஜயகாந்த் முடிவு செய்வர். 2026ம் ஆண்டு தனி அணி அமைப்போம் என்பது பாமகவின் உட்கட்சி முடிவு. அதில் நான் கருத்து கூற முடியாது.

2026-க்கு இன்னும் காலம் இருக்கிறது. தேர்தலை தேமுதிக எப்படி எதிர்கொள்ளும் என்று அப்போது நிலைமையை பொறுத்து முடிவு செய்வோம். மழை வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பிற்கு ரேடரை குறைசொல்லும் லட்சனத்தில் அரசாங்கம் இருக்கிறது. யாராக இருந்தாலும் கமிசன், கரப்சனுக்கு அடிபணியாமல் நல்லாட்சி கொடுக்க வேண்டும். நீட் , நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை முறையாக நிறைவேற்றவில்லை என்ற மனக்குறை மக்களுக்கு இருக்கிறது என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.