வலிமை திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் இயக்குநரை அழைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வலிமை திரைப்படத்தை பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின் படத்தின் இயக்குநரை அழைத்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் நடிப்பில் அண்மையில் வெளியான படம் வலிமை. ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவான வலிமை திரைப்படம் கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி ரிலீசான படம் வலிமை. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இதுக்குறித்து அஜித் ரசிகர்கள் கேட்காத இடங்களே இல்லை என்று கூறலாம். எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் வலிமை அப்டேட் என ரசிகர்கள் கேட்டு வந்தனர். இந்த நிலையில் படம் வெளியானதை அடுத்து முந்தைய பல படங்களின் ஓப்பனிங் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்தது. ரிலீசான முதல் வாரத்திலேயே 100 கோடியை வசூல் செய்து வலிமை திரைப்படம் 100 கோடி கிளப்பில் இணைந்தது. சமீபத்தில் வலிமை படம் உலகம் முழுவதும் 200 கோடிகளை கடந்து வசூல் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூரே அறிவித்தார். இதனை தொடர்ந்து கடந்த மார்ச் 25 ஆம் தேதி ஓடிடி தளத்திலும் வலிமை படம் ரிலீஸ் செய்யப்பட்டது.

ஜீ 5 தளத்தில் வெளியிடப்பட்ட வலிமை, அதிலும் சாதனை படைத்தது. ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட்ட 48 மணி நேரத்தில், அனைத்து மொழிகளிலும் 100 மில்லியன் ஸ்டிரீம்மிங் டைமிங்கை கடந்து சாதனை படைத்துள்ளது. வலிமை படத்தின் அடுத்தடுத்த சாதனைகளை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். வலிமை திரைப்படம் சென்னையில் பைக் ரேஸ் கும்பலை சேர்ந்தவர்கள் நகை பறிப்பு, கொலை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபடுவது, இவர்கள் வேலையில்லாத இளைஞர்கள், மனஅழுத்தத்தில் உள்ளவர்களை குறிவைத்து தங்கள் வலையில் சிக்க வைப்பது போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இந்த திரைப்பட பாணியில் சென்னையில் பல்வேறு குற்றச்சம்பவங்கள் நிகழ்ந்தன. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் வினோத்தும், செய்திதாள்களில் வந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் வலிமை திரைப்படத்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்த்துள்ளார்.

பின்னர் தனது குழுவிடம் இயக்குநர் வினோத்திடம் விசாரிக்க சொல்லி இருக்கிறார். எந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாக வைத்து இந்த கதையை வினோத் இயக்கினார். உண்மையிலேயே தமிழகத்தில் அப்படி ஏதாவது போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதா என்ற விசாரணையை வினோத்திடம் இருந்தே துவக்க முதல்வர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதனிடையே அண்மையில் தமிழகத்தில் கஞ்சா வேட்டை 2.0 என்ற ஆப்ரேஷனை துவக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 28 ஆம் தேதி துவங்கிய இந்த ஆப்ரேஷன், ஏப்ரல் 27 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகத்தில் போதைப் பொருள் உற்பத்தி, கடத்தல் போன்றவற்றை வேட்டையாட தான் இந்த ஆப்ரேஷன் துவங்கப்பட்டுள்ளது. இந்த சமயத்தில் வலிமை படம் வந்திருப்பதால் அதை அடிப்படையாகக் கொண்டும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆப்ரேஷனில் ஏற்கனவே பல பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் பலர் கைதாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
