அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. குடும்பத்தினருக்கும் ஆறுதல்..!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936ம் ஆண்டு அவ்வை நடராஜன் பிறந்தார். மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிவர்.
சென்னையில் உடல்நலக்குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 1936ம் ஆண்டு அவ்வை நடராஜன் பிறந்தார். மதுரையில் உள்ள தியாகராசர் கல்லூரி, தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரி ஆகியவற்றில் தமிழ் விரிவுரையாளராகப் பணியாற்றிவர். டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் துணைத் தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
இதையும் படிங்க;- கருணாநிதி குடும்பம் ஆக்டோபஸ்.. ரெட் ஜெயிண்ட் நிறுவனம் அரக்கன்.. போற போக்கில் திமுகவை விளாசிய டிடிவி..!
கடந்த சில மாதங்களாகவே அவ்வை நடராஜன் நீரிழிவு நோயால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார். இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் கூறினார். அப்போது கவிஞர் வைரமுத்து, மாவட்ட செயலாளர் சிற்றரசு, எம்.பி. ஜெகத்ரட்சகன் உள்ளிட்டோர் உடனிருந்தார்.
இதையும் படிங்க;- பல துறைகளில் இந்தியாவுக்கே தமிழ்நாடுதான் முன்னோடி.. முக்கியப் பங்காற்றியது திராவிட இயக்கம்.. முதல்வர் ஸ்டாலின்