Asianet News TamilAsianet News Tamil

2வது முறையாக டெல்லி புறப்பட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.. நாளை குடியரசுத் தலைவரை சந்திக்கிறார்..!

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

CM stalin meet president ramnath govind
Author
Tamil Nadu, First Published Jul 18, 2021, 5:26 PM IST

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திப்பதற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார்.

தமிழக முதல்வராக, கடந்த மே 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அந்த காலகட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்திருந்த நிலையில், குடியரசுத்தலைவரை அவர் சந்திக்கவில்லை. கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், கடந்த மாதம் 17-ம் தேதி டெல்லி சென்று பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார். 

CM stalin meet president ramnath govind

இந்நிலையில், 2வது முறையாக முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார். நாளை பகல் 12 மணிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முதல்வராக பொறுப்பேற்ற பிறகு முதல் முறையாக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசுகிறார்.

CM stalin meet president ramnath govind

இந்த சந்திப்பில் தலைமைச் செயலர் வெ.இறையன்பு , டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்க வாய்ப்புள்ளது.அப்போது, மேகதாது அணை விவகாரம், பேரறிவாளன் உட்பட 7 விடுதலை விவகாரம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios