சென்னையில் மாநில கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரிடையாக சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

சென்னை: சென்னையில் மாநில கட்டுப்பாட்டு மையத்துக்கு நேரிடையாக சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் பார்வையிட்டு நடவடிக்கைகளை துரிதப்படுத்தினார்.

சென்னையில் 3 நாட்களை கடந்து கனமழை கொட்டி வருகிறது. எங்கு பார்த்தாலும் சாலைகள் தெரிவதற்கு பதிலாக அதன் மேலே நிரம்பி வழியும் மழைநீர்+கழிவுநீர் காட்சி அளிக்கிறது. பல பகுதிகளில் எது குடியிருப்பு, எது குளம் என்று கண்டே பிடிக்கமுடியாதவாறு கண்ணுக்கு எட்டிய தூரம் மழைநீர் வெள்ளமாக காணப்படுகிறது.

தேங்கிய மழைநீரில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என அனைத்து கட்சிகளும் மக்களை சந்தித்து நிலவரத்தை கேட்டறிந்து ஆறுதல் கூறி வருகின்றனர். நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மாநகராட்சி மற்றும் அந்தந்த துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர். வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மாமல்லபுரத்துக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே நாளை கரை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

வானிலை மையத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து யாரும் 3 நாட்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டும் என்று அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கைகயாக அனைத்து மாவட்டங்களிலும் பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் நிலையில் உள்ளனர்.

சென்னையில் பெய்து வரும் கனமழையால் சேதம் அடைந்துள்ள பகுதிகளுக்கு நேடிரயாக விசிட் செய்யும் முதல்வர் ஸ்டாலின் நிவாரண பணிகளை முடுக்கிவிட்டபடி இருக்கிறார். பாதிக்கப்பட்ட மக்களை களத்தில் சென்று அவர்களுக்கு தமது கையால் உணவும் வழங்கி அதிரடி காட்டி வருகிறார்.

அதன் முக்கிய அம்சமாக 4வது நாளாக இன்றும் களத்தில் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு வருகிறார். அந்த வகையில் சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் பேரிடர் மேலாண்மை துறையின் மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்துக்கு முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்றார்.

அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளை நேரிடையாகவே ஆய்வு செய்தார். ஒரு கட்டத்தில் கட்டுப்பாட்டு மையத்தில் உள்ள தொலைபேசி அழைப்புகளை தானே நேரிடையாகவே கையாண்டு குறைகளை கேட்டறிந்தார். அதற்கேற்ப நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தல்களை முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுக்கு வழங்கினார்.

இது குறித்த விவரங்களை அவர் தமது டுவிட்டர் பதிவிலும் வெளியிட்டு உள்ளார். அதில முதல்வர் ஸ்டாலின் கூறி இருப்பதாவது:

மழைவெள்ளபாதிப்புகள்குறித்துபொதுமக்கள்புகார்அளிக்கஅமைக்கப்பட்டுள்ளகட்டுப்பாட்டுஅறையைப்பார்வையிட்டு, தியாகராயநகரில்கால்வாயில்கொட்டப்பட்டுள்ளகழிவுகளைஅகற்றும்பணியையும்ஆய்வுசெய்தேன்.

இருநாட்களுக்கு #RedAlert விடுக்கப்பட்டுள்ளதால்பொதுமக்கள்பாதுகாப்பாகஇருக்கவும்என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளார். தி நகர் பகுதியில் கழிவுகள் அகற்றும் பணிகள், சாலைகளில் தேங்கிய மழைநீரை அப்புறப்படுததும் பணிகள், ஜிஎன் செட்டி சாலை, விஸ்வநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். தேங்கியுள்ள தண்ணீரை விரைந்து அகற்றி, உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறும் அவர் உத்தரவிட்டார்.

Scroll to load tweet…