முதலமைச்சர் ஸ்டாலின் செய்தது தவறு இல்லை.. உங்களுக்கு நல்ல பெயர் வரணும்னா இதைசெய்யுங்க.. டிடிவி. தினகரன்..!

கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்பதற்க்காக ஆளுநர் விவகாரத்தில் அதிமுக மௌனம் காத்து வருகின்றனர். 

CM Stalin did in the tamilnadu assembly was right.. TTV Dhinakaran

பல பிரச்சனைகள் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. ஆனால், நேற்று ஆளுநர் செய்தது இதையெல்லாம் மறைத்துவிட்டது. திமுக வளர்வதற்கு அவர் உதவி செய்து வருகிறார் என டிடிவி. தினகரன் கூறியுள்ளார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியில் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழக சட்டப்பேரவையில் நடந்தது ஒரு கருப்பு தினமாக பார்க்கப்படுகிறது. நாங்கள் என்ன செய்தாலும் யாரும் கேட்க மாட்டார்கள் என்று ஆளுநர் நினைக்கிறார். அது வருத்தம் அளிக்கிற செயல்படாக பார்க்கிறோம். மேலும், ஆளுநர் தேவை இல்லாமல் அரசியல் பேசி வருகிறார். 

இதையும் படிங்க;- வக்கிர புத்தி.. எந்த காலத்திலும் திமுக காரனுங்க திருந்தவே மாட்டானுங்க.. பெண் போலீசுக்கே பாலியல் தொல்லை! டிடிவி

CM Stalin did in the tamilnadu assembly was right.. TTV Dhinakaran

கடந்த முறை ஆட்சியில் இருந்த போது ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்ளவேண்டும் என்பதற்க்காக ஆளுநர் விவகாரத்தில் அதிமுக மௌனம் காத்து வருகின்றனர். ஆளுநர் ஒருப்பக்கம் அரசுக்கு எதிராக இருக்கிறார். ஆனால், மறுப்பக்கம் அவருக்கு ஆதரவாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. இந்த ஆட்சி விடியா ஆட்சியாக உள்ளது. பல பிரச்சனைகள் திமுக அரசுக்கு எதிராக உள்ளது. ஆனால், நேற்று ஆளுநர் செய்தது இதையெல்லாம் மறைத்துவிட்டது. திமுக வளர்வதற்கு  அவர் உதவி செய்து வருகிறார். 

CM Stalin did in the tamilnadu assembly was right.. TTV Dhinakaran

முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தது தவறில்லை என்று நினைக்கிறேன். அரசியல் தலைவராக அவர் செய்தது தவறு இல்லை. பாஜக ஆளுநருக்கு நேரடியாக ஆதரவு தருவது தவறு. நாடாளுமன்ற தேர்தல் குறித்து இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. தேமுதிகவிற்கும் அமமுகவிற்கும் எந்த பிரச்சனையும் இல்லை.

இதையும் படிங்க;-  எனது வாரிசுகள் யாரும் அரசியலுக்கு வர மாட்டாங்க சொன்னீங்க.. இப்ப என்ன சொல்றீங்க.. ஸ்டாலினை சீண்டும் தினகரன்.!

CM Stalin did in the tamilnadu assembly was right.. TTV Dhinakaran

தேர்தல் வரும் போது கூட்டணி முடிவு செய்யப்படும். தற்போது வரை தேமுதிக சுதீஷ் உடன் பேசி கொண்டு ததான் இருக்கிறேன். நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு மிக பெரிய பின்னடைவு இருக்கிறது என டிடிவி.ததினகரன் கூறியுள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios