Asianet News TamilAsianet News Tamil

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில் உயிரிழந்த ஒப்பந்த ஊழியர்... நிவாரணம் அறிவித்தார் மு.க.ஸ்டாலின்!!

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில் பலியான சென்னை கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

cm stalin announces relief for contract worker whom died while cleaning septic tank
Author
Chennai, First Published Jun 30, 2022, 6:41 PM IST

கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்கையில் பலியான கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த ஊழியரின் குடும்பத்தினருக்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முன் தினம் காலை முதல் ஜெட் ராடிங் மற்றும் சூப்பர் சக்கர் இயந்திரத்தைப் பயன்படுத்தி மாதவரம் முத்துமாரியம்மன் கோயில் தெருவில் கழிவுநீர் அடைப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ஒப்பந்தத் தொழிலாளர் நெல்சன் என்கிற கட்டாரி இயந்திர துளையில் ஏதேனும் கல்/துணி அடைக்கப்பட்டிருக்கிறதா என்று சாலையில் நின்று கவனித்தபோது, இயந்திர துளையில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து விட்டார்.

இதையும் படிங்க: திடீர் விசிட் சென்ற முதலமைச்சர்.. பணியில் இல்லாமல் இருந்த அதிகாரி சஸ்பெண்ட்.. அடுத்து நடந்தது என்ன..?

அவரைக் காப்பாற்ற முயன்ற ஒப்பந்த தொழிலாளர் ரவிகுமார் என்பவரும் இயந்திர துளையில் விழுந்து விட்டார். உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு இருவரும் உயிருடன் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் ஒப்பந்தத் தொழிலாளர், நெல்சன் என்கிற கட்டாரி என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதையும் படிங்க: மீண்டும் திமுகவில் இணைகிறாரா பாஜக முக்கிய நிர்வாகி சரவணன்..! அவரே சொன்ன பரபரப்பு தகவல்

இந்த நிலையில் உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் நெல்சன் குடும்பத்தினருக்கு இழப்பீடாக நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.83 இன் படி ரூ.15 லட்சம் வழங்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை பெற்றுவந்த ஒப்பந்த தொழிலாளர் ரவிகுமார் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் ரவிகுமார் குடும்பத்தினருக்கும் இழப்பீடாக நகர் நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை எண்.83 இன் படி ரூ.15 இலட்சம் வழங்கப்படும் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios