நீட் விவகாரத்தில் தந்தையும், மகனும் சேர்ந்து நாடகம் ஆடிக்கொண்டிருக்கின்றனர் - முனுசாமி குற்றச்சாட்டு
நீட் தேர்வு விவகாரத்தில் தந்தையும், மகனும் சேர்ந்து நாடகமாடிக்கொண்டு இருப்பதாக முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினை அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி குற்றம் சாட்டி உள்ளார்.
அரியலூரில் அதிமுக நிர்வாகி இல்ல விழாவில் கலந்து கொள்வதற்காக வருகை தந்த அதிமுக துணை பொதுச்செயலாளர் கே பி முனுசாமி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுக துணைப் செயலாளர் கே.பி முனுசாமி, ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் கொடுத்த ஒரு வாக்குருதியையும் நிறைவேற்றவில்லை.
அதோடு மட்டுமல்லாமல் நீட் தேர்வில் தந்தையும், பிள்ளையும் நாடகமாடிக் கொண்டிருக்கின்றார்கள். தேர்தல் நேரத்தில் இருவரும் நாங்கள் ஆட்சி அமைத்தால் முதல் கையெழுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொன்னார்கள். எவ்வளவு மக்களை, பெற்றோர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். படிக்கின்ற மாணவர்களையும் ஏமாற்றி இருக்கின்றார்கள்.
அப்பழுக்கற்ற பிரதமர் மோடியை குறை சொல்ல திமுகவிற்கு உரிமை இல்லை - வானதி சீனிவாசன் விமர்சனம்
தற்போது உண்ணாவிரதம் என்ற பெயரில் அமர்ந்திருக்கின்றார்கள். இறந்த குழந்தைகளின் போட்டோவை வைத்து மலர் தூவி கொண்டிருக்கின்றார்கள். அதோடு மட்டுமல்லாமல் உதயநிதி நீங்களும் வாருங்கள் இணைந்து செயல்படுங்கள். நீட் தேர்வை ரத்து செய்வோம். அதற்கு வருகின்ற புகழ்கூட நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சராசரி மனிதனை விட கீழ்த்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றார்.
தமிழகத்திற்கு தண்ணீர் தராத காங்கிரஸ் கட்சிக்காக வாக்கு கேட்பதா? திமுகவுக்கு சீமான் கேள்வி
2021 தேர்தலில் எங்களிடம் நீட் தேர்வு ரகசியம் இருப்பதாக சொன்ன உதயநிதி ஸ்டாலின் இப்போது மாறி பேசிக் கொண்டிருக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த தேர்தல் வாக்குறுதியில் மாணவர்கள் படிக்கும் கல்வி கடனை முழுமையாக ரத்து செய்வதாக சொன்னார்கள். நீட் தேர்வுக்கு போராடும் ஸ்டாலின் ஏன் மாணவர்களின் கல்விக் கடனை ரத்து செய்யவில்லை? தங்களது பொய்யான நாடகத்தை தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தந்தையும், மகனும் செயல்பட்டு வருகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.