தமிழக முதல்வராக 2017ம் ஆண்டு முதல் பணியாற்றி வருபவர் எடப்பாடி பழனிச்சாமி. இவர் சேலம் மாவட்டம் சங்ககிரியைச் சேர்ந்த காளியண்ணன் என்பவரது மகளான ராதாவை திருமணம் செய்துள்ளார். 75 வயதான முதல்வரின் மாமனாரான காளியண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக குமரபாளையத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் மாரடைப்பு காரணமாக இன்று காளியண்ணன் காலமானார். இதையயடுத்து அவரது உடல் சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இருக்கும் தேவூர் அம்மாபாளையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவரது நல்லடக்கம் குமரபாளையத்தில் இன்று இரவு 11 மணி அளவில் நடைபெற இருக்கிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர், அமைச்சர்கள் அதிமுக  நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.