Asianet News TamilAsianet News Tamil

புற்றுநோய் பாதித்த குழந்தைக்காக ட்விட்டரில் வந்த கோரிக்கை..! முதல்வரின் உடனடி ரியாக்‌ஷன்..!

இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்துப் போராடும் இக்குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். இக்குழந்தைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்

cm palanisamy's respond to twitter request to help a cancer affected baby
Author
Chennai, First Published Apr 19, 2020, 3:40 PM IST

இந்தியாவில் பெரும் அச்சத்தை விளைவித்திருக்கும் கொரோனா வைரஸ் தமிழகத்திலும் அசுர வேகம் எடுத்துள்ளது. இன்று வரை 1,372 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கின்றனர். ஒட்டுமொத்த அரசுத் துறையும் கொரோனாவால் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகளை போக்க தீவிரமாக செயலாற்றி வருகிறது. இதனிடையே சமூக வலைதளங்கள் மூலமாகவும் முதல்வர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் ஆகியோர் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய தேவைகள் மற்றும் மக்கள் எழுப்பும் கோரிக்கைகளை உடனடியாக  நிறைவேற்றி வருகின்றனர்.

cm palanisamy's respond to twitter request to help a cancer affected baby

அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் சமூக வலைதள பக்கங்களில் அண்மையில் வரும் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டு கொண்டிருக்கிறது. இன்று குழந்தை ஒன்றின் ரத்தப் புற்று நோய்க்கு மருந்துகள் தேவை என முதல்வரின் ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் உடனடியாக அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் பதிலளித்திருக்கிறார். தமிழக முதல்வரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கை குறிப்பிட்டு கோகுல் சங்கர் என்பவர், இந்தக் குழந்தைக்கு ரத்தப் புற்றுநோய் மருந்துகள் சென்னையில் உள்ள ICHமருத்துவமனை மூலம் கொடுக்கப்படுகிறது. மருந்து தற்போது தீர்ந்துவிட்டது, தற்பொழுது உள்ள சூழ்நிலையால் பெற்றோரால் சென்று மருந்து வாங்க முடியவில்லை. தயவுகூர்ந்து மருந்துகள் பெற்றோரைச் சென்றடைய வேண்டுகிறேன். நன்றி" என்று மருந்துகளின் பெயர்கள் அடங்கிய கடிதங்கள் மற்றும் புகைப்படத்துடன் குறிப்பிட்டிருந்தார்.

 

அதற்கு உடனடியாக பதிலளித்திருக்கும் முதல்வர், ”இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்துப் போராடும் இக்குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். இக்குழந்தைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் வரும் கோரிக்கைகளுக்கு முதல்வர் உடனுக்குடன் பதிலளிப்பது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios