ஜப்பான், சிங்கப்பூர் செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... என்ன காரணம் தெரியுமா?

இந்த ஆண்டும் தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் தொழில்துறை அமைச்சரை அந்தத் துறையினுடைய செயலாளரையும் சந்திக்கும்போதெல்லாம், "இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?

CM MK. Stalin is going to Japan and Singapore

2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

சென்னையில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் ரூ. 1891 கோடி முதலீட்டில் 2000-க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் அறைகளுக்கான குளிர்சாதன இயந்திரங்கள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தி ஆலை அமைப்பதற்கு  புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் நிறுவப்படவுள்ள இந்த ஆலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி முதல்வர் ஸ்டாலின் உரையாற்றுகையில்;- கடந்த ஆண்டு நான் அதிகம் கலந்துகொண்டிருக்கக்கூடிய நிகழ்ச்சிகளின் வரிசையில் எடுத்து பார்த்தால் தொழில்துறை நிகழ்ச்சிகள் தான் அதிகமாக இருக்கிறது. 

CM MK. Stalin is going to Japan and Singapore

அந்த வகையில் இந்த ஆண்டும் தொழில்துறை சார்ந்த நிகழ்ச்சிகளே அதிகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு முறையும் நான் தொழில்துறை அமைச்சரை அந்தத் துறையினுடைய செயலாளரையும் சந்திக்கும்போதெல்லாம், "இதுவரை போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை என்ன? புதிய முதலீடுகள் எப்போது வரும்? புதிதாக எத்தனை பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்?" என்று நான் கேட்டுக்கொண்டே இருப்பேன்.

2024-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக வரும் 23-ஆம் தேதி ஜப்பான் மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்குச் செல்ல இருக்கிறேன். இந்த நிலையில் மிக ஸ்மார்ட்டாக, முன்கூட்டியே ஜப்பான் நாட்டைச் சேர்ந்த நிறுவனத்தை வைத்து, இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்படும் நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

CM MK. Stalin is going to Japan and Singapore

தொழில் துறை நிகழ்ச்சிகள் என்பவை அந்தத் துறை நிகழ்ச்சிகளாக மட்டும் அமைவது இல்லை, இந்த மாநில வளர்ச்சியினுடைய நிகழ்ச்சிகளாகவும் அமைந்திருக்கின்றன. மின்னணுவியல் துறையில், உலகளாவிய முன்னணி நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் நிறுவனத்தின் குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் காற்றழுத்தக் கருவிகள் உற்பத்தித் திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்ச்சியாக மட்டுமில்லாமல் அதற்கான ஆலை அமைப்பதற்கும் அடிக்கல் நாட்டி வைத்து இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இது எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியாக அமைந்திருக்கிறது என தெரிவித்துள்ளார். 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios