Asianet News TamilAsianet News Tamil

அமமுக முக்கிய நிர்வாகிகளை தூக்க அதிரடி திட்டம்.. தினகரனை திக்குமுக்காட வைக்கப்போகும் எடப்பாடியார்..!

சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் டிடிவி.தினகரன் பக்கம் வலுவாக இருக்கும் அமமுக நிர்வாகிகளை அதிமுக பக்கம் இழுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Edappadi palanisamy master plan
Author
Tamil Nadu, First Published Mar 7, 2021, 3:22 PM IST

சசிகலா அரசியலைவிட்டு ஒதுங்குவதாக அறிவித்துள்ள நிலையில் டிடிவி.தினகரன் பக்கம் வலுவாக இருக்கும் அமமுக நிர்வாகிகளை அதிமுக பக்கம் இழுக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமமுகவின் துணை பொதுச்செயலாளராக இருப்பவர் c. இவர் அதிமுகவில் தஞ்சை மாவட்ட செயலாளராக இருந்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டார். ஆனால், தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது. பின்னர், அதிமுக ஆட்சியை பிடித்தது. ஆனால், ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது நடந்த இடைத்தேர்தலில் ரெங்கசாமி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் முன் கூட்டியே வெற்றி பெற்றிருந்தால்  அமைச்சராகியிருப்பார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பல்வேறு குழப்பங்களால் அமைச்சராகவில்லை. பின்னர், டிடிவி.தினகரன் அணிக்கு சென்றதால் பதவியை இழந்தார். 

CM Edappadi palanisamy master plan

பின்னர், சசிகலா வருகைக்கு பிறகு தனக்கு முக்கியத்துவம் கிடைக்கும் எனவும் காத்திருந்தார்.ஆனால், சசிகலாவின் விலகல் அறிவிப்பு அவருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், அவர் டிடிவி.தினகரன் அணியில் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.இதனை சரியான பயன்படுத்திக்கொண்ட முதல்வர் வைத்தியலிங்கம் மூலம் தனியாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

CM Edappadi palanisamy master plan

இந்நிலையில், வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் தஞ்சாவூர் தொகுதியில் ரெங்கசாமியைப் போட்டியிட வைப்பதற்கு அக்கட்சி தலைமை முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் தினகரன் பக்கமுள்ள முக்கிய நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு அமமுகவிலிருந்து, அதிமுகவுக்கு வந்தால் உங்களுக்கு தேர்தலில் போட்டியிட சீட், அத்துடன் தேர்தல் செலவுக்கான பணத்தையும் தருகிறோம் என முதலவர் எடப்பாடி பழனிசாமி தரப்பு பேசிவருவதாகவும் கூறப்படுகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios