Asianet News TamilAsianet News Tamil

ஒரே கல்லில் இரண்டு மாங்காய்... பக்காவாக ஸ்கெட்ச் போட்டு தூக்கிய எடப்பாடி..!

மக்களவை தேர்தலோடு 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களவை தேர்தலை விட அதிமுகவுக்கு இடைத்தேர்தல் மிக முக்கியமானது. இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு.

CM edappadi palanisamy master plan
Author
Tamil Nadu, First Published Feb 19, 2019, 12:35 PM IST

வருகிற மக்களவை தேர்தலில் அதிமுக- பாமக இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதியாகி விட்டது. 
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்தோடு 21 தொகுதி இடைத்தேர்தலிலும் அதிமுகவிற்கு பாமக ஆதரவு அளிக்க உள்ளதாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

பாமக இணையப்போவது திமுக கூட்டணியிலா அல்லது அதிமுக கூட்டணியிலா என நீடித்து வந்த குழப்பம் இன்று சென்னை கிரவுண் பிளாசா ஹோட்டலில் முடிவுக்கு வந்திருக்கிறது. 2011ல் அதிமுக ஆட்சி நடத்தி வந்ததில் இருந்தே அக்கட்சியையும் ஆட்சியையும் கடுமையாக விமர்சித்து வந்த பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் புதுவை, தருமபுரி, ஸ்ரீபெரும்புதுார், அரக்கோணம், ஆரணி, சிதம்பரம் உள்ளிட்ட தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. CM edappadi palanisamy master plan

இந்நிலையில் மக்களவை தேர்தலோடு 21 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் மக்களவை தேர்தலை விட அதிமுகவுக்கு இடைத்தேர்தல் மிக முக்கியமானது. இடைத்தேர்தலில் அதிமுக ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 10 தொகுதிகளிலாவது வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்கிற இக்கட்டான நிலையில் இருந்து வருகிறது எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு. CM edappadi palanisamy master plan

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் எடப்பாடி ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கத் திட்டமிட்டுள்ளார். 21 தொகுதிகளில் பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒரளவு ஓட்டு வங்கியை வைத்துள்ளன. இவற்றை கருத்தில் கொண்டே எடப்பாடி பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை கூட்டணிக்குள் இழுத்து வந்து திமுகவுக்கு இணையான கூட்டணியை அமைத்து இருக்கிறார். CM edappadi palanisamy master plan

மக்களவை தேர்தலில் பாதிக்குப்பாதி தொகுதிகளில் வெற்றிபெற்றாலும் 21 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாதிக்கு பாதி வென்றாலும் 10 தொகுதிகளை பாமக, தேமுதிக, பாஜக துணையுடன் வென்று ஆட்சியை தக்கவைத்து கொள்ளலாம் என்கிற மெகா திட்டத்தோடு கூட்டணி அஸ்திரத்தை கனகச்சிதமாக பயன்படுத்தி இருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. ஜெயலலிதாவுக்கு பிறகு முதன் முறையாக சந்திக்க இருக்கும் தேர்தலில் தனது பலத்தை காட்டயிருக்கிறது அதிமுக.

Follow Us:
Download App:
  • android
  • ios