கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விரைவாக குணமடைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதனையடுத்து மருத்துவர்கள் அவரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்படி அமித் ஷாவுக்கு இன்று கொரோனா பரிசோதனை நடந்தது. அந்தப் பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனையடுத்து தனக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதை ட்விட்டரில் அமித் ஷா தெரிவித்தார். மேலும் உடல்நிலை சீராக இருப்பதாகவும் ட்விட்டரில் அமித் ஷா தெரிவித்திருந்தார்.