Asianet News TamilAsianet News Tamil

குடியுரிமை சட்டத்தால் இந்திய முஸ்லீகளுக்கு பாதிப்பு இல்லை..!! போராட்டத்தை நிறுத்துங்கள், கொந்தளிக்கும் முஸ்லீம் மத தலைவர்..!!

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த முஸ்லிம்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியாது . அதேநேரத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் . 

citizenship act will not affect Indian Muslim's Delhi jumma  masque imam says
Author
Delhi, First Published Dec 18, 2019, 3:34 PM IST

தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட புதிய குடியுரிமை சட்டம் முஸ்லிம்களை எந்த வகையிலும் பாதிக்காது என டெல்லி ஜும்மா மசூதி தலைவர் ஷாஜி இமாம் செய்யது அகமது புகாரி அதிரடியாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டுவந்துள்ள திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதிலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. டெல்லி ஜமியா பல்கலைக்கழகத்தில் தொடங்கிய போராட்டம் மத்திய பிரதேசம் அலிகார் பல்கலைக்கழகத்திற்கு பரவி தமிழகம், மேற்கு வங்கம், கேரளம் என நாடு முழுவதிலுமுள்ள கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். 

citizenship act will not affect Indian Muslim's Delhi jumma  masque imam says

போராட்டத்தில் ஈடுபட்ட  டெல்லி ஜமியா பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தேசிய அளவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மாணவர்களின் போராட்டம் தேசிய அளவில் பெரிய அளவில் தாக்கத்தை உருவாக்கி உள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சிகள் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருவதால், நாட்டில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் இச்சட்டம் இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தவே மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது என இஸ்லாமிய அமைப்புகள் கருத்து கூறி வருகின்றன. 

ஆனால் இச்சட்டத்தால் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் விளக்கம் தெரிவித்துள்ளனர். ஆனாலும் போராட்டங்கள் ஓய்ந்தபாடில்லை. உச்சநீதிமன்றமும் இச்சட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் புதிய குடியுரிமை சட்டம் குறித்தும் அதனை எதிர்த்து நடக்கும் போராட்டங்கள் குறித்தும் இஸ்லாமிய இயக்க தலைவர் இமாம் கருத்து தெரிவித்துள்ளார். 

அதன்  விவரம் :-

போராடுவது இந்திய மக்களின் ஜனநாயக உரிமை, மக்கள் போராடுவதை யாரும் தடுக்க முடியாது, அதேசமயம் அது வன்முறையற்ற சத்தியாகிரக போராட்டமாக இருக்கவேண்டும் . போராட்டமும் கட்டுக்குள் இருக்க வேண்டும்  போராடுபவர்களும் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்.

citizenship act will not affect Indian Muslim's Delhi jumma  masque imam says

அதாவது குடியுரிமை திருத்த சட்டத்திற்கும் தேசிய குடிமக்கள் பதிவிற்கும் வித்தியாசம் உள்ளது. குடியுரிமை திருத்த சட்டம், சட்டம் ஆக்கப்பட்டுள்ளது. ஆனால் தேசிய குடிமக்கள் பதிவு சட்டம் ஆக்கப்படவில்லை. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு பாகிஸ்தான், ஆப்கனிஸ்தான், மற்றும் வங்கதேசத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த முஸ்லிம்கள் மட்டுமே குடியுரிமை பெற முடியாது.அதேநேரத்தில் இந்தியாவில் வாழும் முஸ்லிம்களை இந்த சட்டம் ஒன்றும் செய்யாது இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios