சட்டத்தை இயற்றிவிட்டு பிறகு அது குறித்து  மக்களிடம் பாஜக ஆதரவு கேட்க செல்வது  இந்திய அரசியல் வரலாற்றில் இல்லாத ஒரு புதுமை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.  இது குறித்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.  சட்டத்திற்கு ஆதரவு கேட்கிற அளவுக்கு  அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும்  இச் சட்டத்திற்கு  எதிர்ப்பு நிலவுகிறது என்பதையே இது காட்டுகிறது.  அரசியல் கட்சியை தாண்டி ஜனநாயக சக்திகள் மிகக்கடுமையாக இந்தச் சட்டத்திற்கு எதிராக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் பாரதிய ஜனதா தான் இயற்றிய சட்டத்திற்கு தானே ஆதரவு பேரணி நடத்துவது புதுமையாக இருக்கிறது. அதிமுக, பாமக இணைந்து ஆதரவு தந்ததால் தான் இந்தச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.  துப்பாக்கிச்சூடு நடக்கும்  அளவிற்கு போராட்டங்கள் வெடிக்கக் காரணம் ஏற்பட்டுள்ளது .  தமிழக அரசு தனது நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமேயானால் NRA, NPR போன்றவற்றில் ஆதரவு அளிக்கவில்லை என்று முடிவெடுத்தால்  மக்கள் அதை வரவேற்பர்.  
இந்த சட்டம் தமிழகத்தில் ஒன்றாம் தேதி முதல்  நடைமுறைக்கு வரும் என்ற செய்திகள் வெளியாகி வருகிறது . 

தனது நிலைப்பாட்டை அதிமுக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்  என்று  மக்கள் எதிர்பார்க்கின்றனர்.  நெல்லை கண்ணன் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும். பாஜக அரசு கொடுக்கின்ற வேண்டுகோளுக்கு இணங்க அதிமுக அரசு செயல்படுவது அதிமுக அரசின் பலவீனத்தைக் காட்டுகிறது.பட்ஜெட் பற்றி மக்களிடம் கருத்து கேட்பது நாடகம் இன்னும் ஓரிரு நாட்களில் நாடாளுமன்றம் கூட இருக்கிறது .

இந்த நேரத்தில் அவர் கருத்து கேட்கிறார்கள் என்றால் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.  அலங்காநல்லூர் பாலமேடு ஆகிய ஜல்லிக்கட்டுகளில் அனைத்து சமுதாயத்தையும் சேர்த்து நடத்த வேண்டும் அதுதான்  ஜனநாயக நடைமுறை  என அவர் தெரிவித்தார்.