கிறித்துவர்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட பாலிவுட் நடிகை ரவீணா டாண்டன் பகிங்கிர மன்னிப்பு கோர வேண்டும் என  கிறித்துவ அமைப்புகள் கண்டம் தெரிவித்துள்ளன.  இந்தி தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர் திரைப்பட இயக்குநரும், நடன இயக்குநருமான பாரா கான்.  இந்த நிகழ்ச்சியில்,  பிரபல இந்தி நடிகை ரவீனா டாண்டன் மற்றும் காமெடி நடிகை பாரதி சிங் ஆகியோர் கலந்து கொண்டனர். தொகுப்பாளர் சொல்லும் வார்த்தையின் சரியான ஸ்பெல்லிங்கை போர்டில் எழுத வேண்டும் என்பது விளையாட்டின் ஒரு பகுதி.

இந்தப் பகுதியில் தான், ரவீனா டாண்டன் மற்றும் பாரதி ஆகியோருக்கு, கிறிஸ்துவ மதத்தின் புனிதச் சொல்லாகப் பயன்படுத்தப்படும் 'அல்லேலுயா' என்ற வார்த்தைக்கான ஸ்பெல்லிங் எழுதச் சொல்லப்பட்டது. ரவீனா, அதைச் சரியாக எழுதிவிட, பாரதி தவறாக எழுதினார். 'ஏன் அப்படி தவறாக எழுதினீர்கள்?' என்று பாரதியிடம் கேட்டனர். இதற்கு பதிலளித்த பாரதி 'உங்கள் ஊரில், இந்தி நடிகர் அமிதாப்பச்சனை, அமிதாப் பச்சன் என்று அழைப்பீர்கள். அதையே பஞ்சாபில் அம்தாப் பசன் என்று அழைப்போம். அதுபோலவே, எங்கள் ஊரில், நீங்கள் சொன்ன அல்லேலூயா வார்த்தையை இப்படித்தான் எழுதுவோம்' என்று கூறினார். தொடர்ந்து, அந்த வார்த்தைக்கு வேறு என்னவெல்லாம் அர்த்தம் மற்றும் மாடுலேஷன் இருக்கிறதென அந்த நிகழ்ச்சியிலேயே விவரித்தார்.

இந்தக் காட்சியைக் கண்ட பலரும், பாரதியின் செயலை சமூக வலைதளங்களில் கண்டித்தனர். இது தொடர்பாக சென்னை அமைந்தகரையில் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் ஃப்ரெண்ட் என்ற கிறித்துவ அமைப்பு சார்பாக செய்தியாளர் சந்திப்பு நடைப்பெற்றது. இதில் பேசிய பிசப் மனோ டேனியல் யேசு கிறிஸ்துவின் பிறந்தநாளின் முதல் நாளில் திட்டமிட்டு கிறிஸ்துவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் மனதை புண் படுத்தும் விதமாக அல்லேலூயா என்ற இழிவு படுத்தி மிகக்கேவலமான முறையில் பேசிய பாலிவுட் இயக்குனர் பாராகான் மற்றும் 

பாலிவுட் நடிகை ரவீணா டண்டன், நகைச்சுவை நடிகர் பாரதி சிங் ஆகியோர் அந்த நிகழ்ச்சியிலே பகிங்கர மன்னிப்பு கோர வேண்டும் எனவும், மன்னிப்பு கோராவிட்டால் கிறிஸ்டியன் டெமாக்ரடிக் ஃப்ரெண்ட்ஸ் கூட்டமைப்பு சார்பாக ஓட்டுமொத்த கிறித்துவ அமைப்புகள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகளை  ஒண்றினைத்து மிகப்பெரிய போராட்டத்தையும் முன்னெடுக்கபோவதாக அறிவித்தனர்.  பிரபலமான நடிகையாக இருந்து கொண்டு வேண்டுமென்றே திட்டமிட்டு இந்த செயலை செய்து விட்டு வெந்த புண்ணில் மிளகாய் தூவது போல டிவிட்டரில் அந்த வீடியோவை மீண்டும் பதிவிட்டு மன்னிப்பு கோருவது போல நடித்துள்ளார். எந்தநிகழ்ச்சியில் அவதூறாக பேசினார்களோ அதே நிகழ்ச்சியில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் எனவும் கண்டனங்களையும் தெரிவித்து கொண்டனர்.