Asianet News Tamil

சீன அதிபர் - மோடி வருகையின் போது சென்னையில் நடந்த பயங்கரம்... குலைநடுங்க வைக்கும் சம்பவத்தை அம்பலப்படுத்தும் திமுக..!

சீன அதிபர் - மோடி வருகையின் போது சென்னையில் நடந்த பயங்கர சம்பவங்களை முரசொலி நாளேடு பட்டியலிட்டு உள்ளது.

Chinese President: Terror in Chennai during Modi's visit
Author
Tamil Nadu, First Published Oct 12, 2019, 3:56 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

திமுகவின் அதிகாரப்பூரவ நாளேடான முரசொலியில் கொலைநகரம் என்கிற தலைப்பில் ஒரு கட்டிரை வெளியாகி இருக்கிறது. அதில், ’’சென்னைக்கு சீன அதிபர் வருகிறார். எனவே உச்சகட்ட பாதுகாப்பு வளையத்தில் இருந்தது தலைநகர் என எல்லா ஊடகங்களும் ஊதுகின்றன. எத்தனை ஆயிரம் காவலர்கள் தெரியுமா? 15 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் இருக்கிறார்கள். நக்சல் தேடுதல் வேட்டையில் ஈடுபடும் சிறப்பு அதிரடி படையை சேர்ந்த 100 பேரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு உள்ளார்கள். 

பாதுகப்புபணிகளுக்கான ஒத்திகை மீஅம்பாக்கம், கிண்டி, பல்லாவரம், சைதபபேட்டை என நடந்து மிரட்டி உள்ளார்கள். ஆக மொத்த சென்னையும் காவலர்களாக் வளையம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் உச்சகட்ட முடிவுகளில் ஒன்று குற்ற வழக்குகளில் தொடர்புகொண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட கைதிகளை நீதிம்ன்றத்துக்கு அழைத்து வர  இந்த இரண்டு நாட்களுக்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தை சென்னை காவல்துறை கேட்டுக் கொண்டிருப்பதுதான். 

சீன அதிபர் வரும்போது இக்கைதிகள் வெளியில் வருவது நல்லதல்ல. அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதும் சிரமம் என்பதால் இந்த நடவடிக்கையாம். சபாஷ்... உஷாராக இருக்கிறதே காவல்துறை என்று மார்தட்டி  முடிப்பதற்குள். சென்னை, அண்ணாசாலை அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சும் அரிவாள் வெட்டும். பல்லாவரத்தில் பட்டாக்கத்தி வெட்டு. எழும்பூரில் இருக்கிறது சென்னை மாநகர காவல்துறை அலுவலகம். அதே எழும்பூரில் இருந்து ஆட்டோவில் புறப்படுகிறார் வழக்கறிஞர் மலர்க்கொடி. ஜாம்பஜார் என்ற இடத்துக்கு வருவதற்காக அண்ணாசாலை வழியாக வருகிறார், அவரை இன்னொரு ஆட்டோவில் வந்த இன்னொரு கும்பல் வழி மறிக்கிறது. அரிவாளால் வெட்டுகிறது. ஆட்டோவில் மறைத்து வைத்து இருந்த நாட்டு வெடிகுண்டுகளை எடுத்து வீசுகிறார்கள் ரவுடிகள். குண்டு குறி தவறி சாலையில் விழுந்தது. நடந்து சென்றவர்கள் மீது பட்டுத் தெறித்தது. வெடிகுண்டு சத்தம்  அந்த வட்டாரத்தையே பதைபதைக்க வைக்கிறது, ரவுடிகள் தப்பி விட்டார்கள். வழக்கம்போல லேட்டாக வந்தது போலீஸ். 

குண்டு வீசியபோது பயங்கர சத்தம் எழுந்தது. அப்போது அருகில் வேறொரு ஆட்டோவில் சென்று கொண்டிருந்த உஷா இளையராஜா மற்றும் அந்த ஆட்டீ டிரைவர் வேணு ஆகியோரின் காது சவ்வு கிழிந்தது இவர்கள் மூவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். 

இது காலதுறை ஆணையர் அலுவலகத்துக்கு அருகில் என்றால் அடுத்த நிக்ழவு இவர்கள் பாதுகாப்பு ஒத்திகை நடத்திய பல்லாவரத்தில். பட்டாக்கத்திகளோடு சட்டக்கல்லூரி மாணவர்கள் மோதினார்கள். தனியார் பல்கலைக்கழகத்தில் சட்டம் படிப்பவர்களஸ்வின் குமாரும் கார்த்திக் கணேஷும்.  அஸ்வின் கருக்கு கணேஷ் வழிவிடவில்லையாம். (எவ்வளவு பெரிய இந்திய -சீனப்பிரச்னைகள் பாருங்கள் ) காரைவிட்டு இறங்கி வந்த கணேஷுடன்  அஸ்வினுக்கு சண்டை. கார்த்திக் தன்னிடம் இருந்த பட்டாக்கத்தியை எடுத்து வீசுகிறார். ஊடகங்களில் காட்டப்படும் இக்காட்சிகள் பலகோடி செலவில் எடுக்கப்படும் சினிமா காட்சிகளை விட பரபரப்பாக இருக்கிறது, 

தலை மற்றும் இடது உள்ளங்கையில் வெட்டுக்காயம் பட்ட அஸ்வினுக்கு தலையில் மூன்று தையல். இவ்வளவும் பாதுகாப்பு ஒத்திகை நடந்த இடத்தில் நடந்திருக்கிறது என்றால் தலைநகரை கொலைநகர் என்று அழைக்காமல் என்னெவென்று அழைப்பது? தலைக்கவச வசூலில் இருக்கும் காவல்துறை தலைநகரை கவசமாக இல்லை என்பதை காட்டும் காட்சிகள் இவை. காவல்துறை பற்றிய பயம் குற்றவாளிகளிடம் இல்லாமல் போய்விட்டது. ஆனால், அப்பாவிகளுக்கு வந்து விட்டது. எந்தத் தவறும் செய்யாதவர்கள் போலீஸை பார்த்து பயப்படுகிறார்கள், தவறு செய்பவர்கள் போலீஸை பார்த்து பயப்படுகிறார்கள். தவறு செய்பவர்கள் மத்தியில் அது இல்லை. 

இதையும் படியுங்கள்:- லலிதா ஜூவல்லர்ஸ் கொள்ளையில் திடீர் திருப்பம்... தமிழக காவல்துறைக்கு தண்ணி காட்டிய கர்நாடக போலீஸ்..!

காவல்துறை தனது கண்காணிப்பை ஒழுங்காக செய்யவில்லை என்றால் என்ன காரணம்? காவல்துறையை இன்றைய ஆட்சியாளர்கள் கண்காணிக்காதது தான் காரணம். மக்களை அச்சுறுத்தும் இந்த அதிகாரக் கும்பலுக்கு மக்கள்தான் அச்சம் ஊட்ட வேண்டும். வோட்டு முறையினால்’’ எனத் தெரிவித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios