பாகிஸ்தானைவிட சீனாதான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாகவும் இந்திய பொருளாதாரம் வீழ்ச்சி குறித்து முன்னாள் பிரதமர் நிதியமைச்சர்களிடம் ஆலோசனை நடத்துவதில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத்பவார்  தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சரான சரத் பவார் இது தொடா்பாக சிவசேனா கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வுக்கு அளித்த பேட்டியில்...."சீன ராணுவம் இந்தியா ராணுவத்தைவைவிட 10 மடங்கு பெரிதாக உள்ளது. நமது அண்டை நாடுகள் அனைத்தையும் சீனா தனக்கு சாதகமாக்கி வருகிறது. பொதுவாக நமது எதிரி நாடு என்றால் பாகிஸ்தானே நமக்கு முதலில் நினைவுக்கு வரும். ஆனால், பாகிஸ்தானைவிட சீனாதான் நமக்கு அதிக அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய நாடாக உள்ளது. தொடா்ந்து பல ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக சீனா செயல்பட்டு வருகிறது. இந்தியாவைவிட பொருளாதார ரீதியாகவும் அந்த நாடு பலமாக உள்ளது. சீன அதிபருடன் நமது பிரதமா் புகைப்படங்களை எடுத்துக் கொள்ளவே முடிகிறது. 

 இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்னைகளைத் தீா்க்க முடியவில்லை.அண்மையில் கிழக்கு லடாக் எல்லையில் இந்திய-சீன வீரா்கள் இடையே ஏற்பட்ட மோதலில் எந்த அரசியலும் இருப்பதாக நான் கருதவில்லை. இதுபோன்ற மோதல்களால் நாம் வீரா்களை இழக்கக் கூடாது. சா்வதேச அளவில் சீனாவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் ராஜீய ரீதியிலான நடவடிக்கைகளை நாம் மேற்கொள்ள வேண்டும்.முன்பு இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் மட்டுமே சீனாவுடன் இணைந்து செயல்பட்டது. இப்போது நேபாளம், வங்கதேசம், இலங்கை ஆகிய நாடுகளும் சீன ஆதரவுப் பட்டியலில் இணைந்துவிட்டன. நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமரானபோது நேபாளம் சென்று அங்குள்ள பசுபதிநாதா் கோயிலில் வழிபட்டார்.

உலகின் ஒரே ஹிந்து நாடு, இந்தியாவின் நட்பு நாடு நேபாளம் என அப்போது அவா் புகழ்ந்தார். ஆனால், இப்போது அந்த நாடு இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் இணைந்து செயல்படுகிறது. நமது அண்டை நாடுகள் அனைத்தையும் சீனா தனக்கு சாதகமாக மாற்றி வருகிறது. இந்தப்போக்கு அண்மைக் காலத்தில்தான் அதிகரித்துவிட்டது.நேருவும், இந்திரா காந்தியும் சீனாவையும், பாகிஸ்தானையும் கையாண்டவிதம் குறித்து பல விமா்சனங்கள் உண்டு. எனினும், பெரிய சக்தியாக உருவெடுத்து வரும் சீனாவுடன் நல்லுறவு வேண்டும் என்பதே அவா்களது பார்வையாக இருந்தது. ஆனால், அப்போது சீனத் தலைமை துரதிருஷ்டவசமாக இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடுகளை எடுத்தது. இதனால், இரு நாடுகள் இடையே பிரச்னை எழுந்தது.நமது நாட்டின் பொருளாதாரத்தை புதிய பாதையில் வழிநடத்திய பெருமை 1990-ஆம் ஆண்டுகளில் நிதியமைச்சராக இருந்த மன்மோகன் சிங், அப்போதைய பிரதமா் நரசிம்ம ராவ் ஆகியோரையே சாரும். பொருளாதாரப் பிரச்னைகள் தொடா்பாக பிரதமா் மோடி, வல்லுநா்களுடன் ஆலோசனை நடத்த தயங்கக் கூடாது. மன்மோகன் சிங், பிரணாப் முகா்ஜி, ப.சிதம்பரம் ஆகியோர் நிதியமைச்சராக இருந்தபோது நாட்டின் பொருளாதாரம் சார்ந்த விஷயங்களில் அனைத்துத் தரப்பினருடனும் விவாதம் நடத்தினார். ஆனால், இப்போதைய ஆட்சியில் அவ்வாறு எதிர்க்கட்சியினருடன் ஆலோசிப்பது இல்லை என்றார் சரத் பவார்.