கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து சீனா மெல்லமெல்ல விடுபட்டு வரும் நிலையில் மீண்டும் குறைவான வைரஸ் தாக்கம் நாட்டிற்குள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்து வருகிறது.  இதனால் வெளிநாட்டு பயணிகளையும் வெளிநாடுகளில் உள்ள சொந்த நாட்டு மக்களையும் நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது .  சமீபத்தில் சுமார் 600 புதிய வைரஸ் நோயாளிகள் சீனாவிற்கு வந்தது சீனாவை அதிர்ச்சி அடைய வைத்தது . இதனால் சீனாவில் எல்லைகளை சீல் வைக்க சீன அரசு முடிவு செய்துள்ளது .  சுமார் 11 மில்லியன் மக்கள் சீனாவை விட்டு வெளியில் புலம்பெயர்ந்து வாழ்கின்றனர் .  தற்போது இவர்களை நாட்டிற்குள் அனுமதிப்பதன் மூலம் மீண்டும் வைரஸ் தொற்று ஏற்படக்கூடும் என்ற அச்சத்தால் சீனா அவர்களை நாடு திரும்ப வேண்டாம் என்றும் விமானங்களை இயக்க முடியாது இல்லை என்றும்  முடிவு செய்துள்ளது . 

கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் சினாவிர் 81 ஆயிரம் பாதிக்கப்பட்டனர்.  3200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் ,  முதலில் இந்த வைரஸ் பாதிப்பு ஓராண்டு முதல் 2 ஆண்டுகள் வரை நீடிக்க கூடும் என்பதால் ,  வெளிநாடுகளில் தங்கியுள்ள தங்கள் நாட்டு மாணவர்கள் நாட்டிற்குத் திரும்பினான்  அது அவர்களது  படிப்புக்கு இடையூறாக இருக்கலாம் என்றும் , சீனா தெரிவித்துள்ளது.  வெளிநாட்டில் உள்ள மாணவர்களுடன் கலந்துரையாடும் வகையில் சீன அரசு  மார்ச் 17ஆம் தேதி  உலகம் முழுக்கும் உள்ள சீன நாட்டு தூதர்கள் மூலம் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தது . அந்த உரையாடலில் , கொரோனாவின் மையப் பகுதியாக இருந்த சீனா அதிலிருந்து விடுபட்டு விட்டது .  இப்போது அதனால் அமெரிக்கா பாதிக்கப்பட்டுவருகிறது ,  அதேபோல் ஐரோப்பாவில் பெரும் பகுதிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன .  உலகில் 5 லட்சத்து 32 ஆயிரத்து க்கும் மேற்பட்டோர் நோய்வாய்ப்பட்டு உள்ளனர் . சுமார் 24 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர் . ஆனால்  சீனா மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது . 

மீண்டும் தனது தொழிற்சாலைகளை இயக்க உள்ளது.  இந்நிலையில் வூகனில் கொரோனா  வைரஸ் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது . ஆனாலும்  ஊக்க மாகாணம் முழுவதையும் தொடர்ந்து கண்காணிக்க வேண்டிய அவசியம் சீனாவுக்கு உள்ளது என அந்நாட்டு அதிகாரிகள் வீடியோ கான்பிரன்சிங்கில்  வெளிநாட்டுகளில் உள்ள மாணவர்களுக்கு தெரிவித்துள்ளனர்.  இந்நிலையில் மீண்டும் வெளிநாடுகளில் உள்ள சீன குடிமக்கள் நாட்டிற்குத் திரும்புவதால் சீனாவுக்கு மீண்டும் அது சிக்கலையும் சவாலையும் ஏற்படுத்தும் என சீனாவின் சிவில் ஏவியேஷன் நிர்வாகம் அரசுக்கு எச்சரித்துள்ளது.  

 

இந்நிலையில் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு பயணிகள்  விமானத்தை இயக்க சீனாவிடம் எந்தத் திட்டமும் இல்லை எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டுள்ளது .  எனவே சீன மாணவர்கள் நாட்டுக்குத்  திரும்புவதுடன் இருக்கும் இடத்திலேயே இருப்பது பாதுகாப்பானது ,   சீனாவிற்கு வந்து 14 நாட்கள் தனிமைப்பட்டு இருப்பதற்கு மாற்றாக நீங்கள் இருக்கும் இடத்திலேயே இருங்கள் என சொந்த நாட்டு மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது .  ஆனாலும் வெளிநாடுகளில் தங்களால் முறையான மருத்துவ சிகிச்சை பெற முடியாது என்றும் சீனாவிர் முறையான மருத்துவ சிகிச்சைப்பெறவே நாங்கள் நாட்டிற்கு திரும்ப விரும்புகிறோம் என்று சீன மாணவர்கள் சீன அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளனர். ஆனால் சீனா அதை திட்டவட்டமாக மறுத்துள்ளதாக தெரிகிறது.