மின்சகிவினால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படவில்லை, மருத்துவர்கள் குழு குழந்தைகளை தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர் என மருத்துவ கல்வியக இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.  

மின்சகிவினால் ஏற்பட்ட புகைமூட்டத்தால் குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்படவில்லை, மருத்துவர்கள் குழு குழந்தைகளை தொடர்ந்து கண்கானித்து வருகின்றனர் என மருத்துவ கல்வியக இயக்குனர் நாராயணபாபு தெரிவித்துள்ளார். 

சென்னை கஸ்தூரிபாய் அரசு மகப்பேறு மருத்துவமனையில் இரண்டாம் தளத்தில் உள்ள மருத்துவர்கள் அறையில் மின்கசிவினால் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக அந்த தளத்தில் இருந்த குழுந்தைகளும் தாய்மார்களும் வெளியேற்றப்பட்டு, தொடக்க நிலையிலேயே தீ கட்டுப்படுத்தப்பட்டது. இதன்காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ச்சியாக, சம்பவ இடத்தில் தமிழ்நாடு மருத்துவ கல்வியக இயக்குனர் நாராயணபாபு மற்றும் தேசிய குழந்தைகள் நல ஆணையரக உறுப்பினர் ஆனந்த் ஆய்வு மேற்கொண்டார். இதனை தொடந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமை ஆணையரக உறுப்பினர் ஆனந்த். 

அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் சார்பாக ஆய்வு செய்துள்ளோம். மருத்துவர் அறையில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. மின்கசிவினால் ஏற்பட்ட புகை மற்ற இடங்களுக்கு பரவிடும் என்ற அச்சம் ஏற்பட்டது, எனவே 47 குழந்தைகள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் ஒரு மணி நேரமாக தொடர் மீட்பு பணியில் ஈடுபட்டு அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். குழந்தைகள் நலன் சார்ந்தது என்பதால் தேசிய குழந்தைகள் உரிமை ஆணையத்தின் சார்பாக ஆய்வு மேற்கொண்டதாக தெரிவித்தார். 47 குழந்தைகளும் பாதுகாப்பாக உள்ளனர், யாரும் பதட்டம் அடைய வேண்டாம் என கேட்டு கொண்டார். இது போன்ற மின்கசிவு இனி ஏற்ப்பட கூடாது என தமிழக அரசிற்கு வேண்டுகோள் வைப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேட்டியளித்த மருத்துவ கல்வியக இயக்குனர் நாராயணபாபு, மருத்துவர் அறையில் தான் மின்கசிவினால் விபத்து ஏற்பட்டது. குழந்தைகள் மற்றும் தாயார்கள் இருந்த வார்டுக்கு தீ பரவவில்லை. முன் எச்சரிக்கை காரணமாக தான் அனைவரும் வெறியேற்றப்பட்டனர் என்றார். அந்த தளத்தில் இருந்த 47 குழந்தைகளும் பாதுகாப்பாகவும் நலமாகவும் உள்ளனர். எந்த குழந்தைக்கும் சிறு காயம் கூட இல்லை எனக்கூறிய நாராயணபாபு , திடீரென புகை வந்ததால் தாய்மார்களும் மருத்துவர்களும் பதற்மாகிவிட்டனர் என்றார். மருத்துவர் அறையில் மின்கசிவினால் ஏற்பட்ட புகை குழந்தைகள் வார்டு வரை பரவவில்லை. புகைமூட்டத்தினால் குழந்தைகள் உடல்நலம் ஏதும் பாதிக்கப்பட்டவில்லை. ஆனாலும் மருத்துவர்கள் குழு குழந்தைகளை கண்கானித்து வருகின்றனர் எனவும், பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் நாராயணபாபு கேட்டுக்கொண்டார்.