12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம்  ராஜஸ்தான்த தொடர்ந்து ஹரியானா சட்டசபையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும்  பாலியல் வன்கொடுமைகள் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றன.  அதுவும் குறிப்பாக குழந்தைகள் மீதான  வன்கொடுமை அதிகளவில் உள்ளது.

இதனைத் தடுக்க மிகக்கடுமையான சட்டங்கள் கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். இதையடுத்து ஒரு சில மாநிலங்களில் கடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

அண்மையில் ராஜஸ்தான் மாநிலத்தில் சிறார்களை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு தூக்கு தண்டனை விதிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதைத்தொடர்ந்து தற்போது ஹரியானா மாநிலத்தில் இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை விதிகும் சட்டம்  அம்மாநில சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.