Chief Ministers advocate Vaidyanathan advocated the High Court that it is trying to grab the DMK
எடப்பாடி ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் அணி திட்டமிட்டுள்ளதாகவும், திமுகவுடன் கைக்கோர்க்க முயல்கிறது எனவும் முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் வாதாடினார்
முதல்வர் பழனிசாமிக்கு அளித்த ஆதரவை திரும்பப்பெற்றதால் தினகரன் ஆதரவு 18 எம்.எல்.ஏக்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
தகுதிநீக்கத்தை எதிர்த்து எம்.எல்.ஏக்கள் தாக்கல் செய்த மனு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுடன் சேர்த்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இதுகுறித்த விசாரணை இன்று நடைபெற்றது.
இதில் முதலாவதாக முதலமைச்சர் தரப்பு வழக்கறிஞர் வைத்தியநாதன் உயர்நீதிமன்றத்தில் வாதாடினார். அப்போது, எடப்பாடி ஆட்சியை கலைக்க டி.டி.வி. தினகரன் அணி திட்டமிட்டுள்ளதாகவும், திமுகவுடன் கைக்கோர்க்க முயல்கிறது எனவும் வாதாடினார்.
இதைதொடர்ந்து வாதாடிய டிடிவி தரப்பு எடப்பாடியை தவிர வேறு யார் வேண்டுமானாலும் முதல்வராக இருக்கட்டும் எனவும் வேறு யார் இருந்தாலும் வாக்களிப்போம் எனவும் தெரிவித்தனர்.
இதையடுத்து 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கு உட்பட 7 வழக்குகளின் விசாரணையை நவம்பர் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்.
