Asianet News TamilAsianet News Tamil

முதல் ஆளாக சீமானுக்கு ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்.. தந்தையின் இறப்பு செய்தி வேதனையளிப்பதாக இரங்கல்.

இது குறித்து நாம் தமிழர் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சீமானின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

Chief Minister Stalin was the first to offer his condolences to Seaman.
Author
Chennai, First Published May 13, 2021, 4:20 PM IST

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தையார் மறைந்தார் என்ற செய்தி வேதனை அளிக்கிறது என தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திரைப்பட இயக்குனரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமானின் தந்தை செந்தமிழன் உடல்நலக் குறைவின் காரணமாக காலமானார் அவரது மறைவு நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகேயுள்ள அரணையூர் என்ற கிராமத்தில் சீமான் பெற்றோர்கள் செந்தமிழன், அன்னம்மாள் வசித்துவந்தனர். கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த சீமானின் தந்தை செந்தமிழன் இன்று அரணையூரில் காலமானார். 

Chief Minister Stalin was the first to offer his condolences to Seaman.

 

இது குறித்து நாம் தமிழர் கட்சி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. சீமானின் தந்தையின் மறைவுக்கு நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட பலரும் சமூக வலைதளத்தில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் சீமானின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது. 

Chief Minister Stalin was the first to offer his condolences to Seaman.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.சீமான் அவர்களின் தந்தையார் செந்தமிழன் அவர்கள் மறைவு செய்தி வேதனை அளிக்கிறது. அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தந்தையை இழந்து துயரத்தில் இருக்கும் திரு சீமான் அவர்களுக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன். என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios