Asianet News TamilAsianet News Tamil

கெத்தா முதல்வர் ஸ்டாலின் ஆளுநருக்கு கொடுத்த 2 பரிசு.. அது எது சம்பந்தமானது தெரியுமா..??

தமிழக ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என ரவிக்கு தமிழக முதலமைச்சர் இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கினார். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு புத்தகங்களை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ள முதலமைச்சர் ஆளுநருக்கும் அதே பாணியில் புத்தகத்தை வழங்கியுள்ளார். 

Chief Minister Stalin's gift to the Governor .. Do you know what it is .. ??
Author
Chennai, First Published Sep 18, 2021, 2:13 PM IST

தமிழக ஆளுநராக பதவியேற்றுள்ள ஆர்.என ரவிக்கு தமிழக முதலமைச்சர் இரண்டு புத்தகங்களை பரிசாக வழங்கினார். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் விருந்தினர்களுக்கு புத்தகங்களை வழங்குவதை வாடிக்கையாக வைத்துள்ள முதலமைச்சர் ஆளுநருக்கும் அதே பாணியில் புத்தகத்தை வழங்கியுள்ளார். 

தமிழகத்தின் புதிய ஆளுநராக இன்று ஆர்.என் ரவி இன்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் காலை 10:30 மணி அளவில் அவரது பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, சட்டப் பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, அவை முன்னவர் துரைமுருகன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி நாடாளுமன்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாஜக நிர்வாகிகள் மற்றும் பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர். 

Chief Minister Stalin's gift to the Governor .. Do you know what it is .. ??

பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பின்னர் ஆளுநர் ஆர்.என் ரவி செய்தியாளர்களிம் பேசினார். தமிழில் வணக்கம் என கூறி செய்தியாளர் சந்திப்பை தொடங்கிய அவர், தமிழ்நாட்டில் இருப்பது பெருமை அளிக்கிறது, இந்திய அளவில் தமிழர் நாகரிகம் பண்பாட்டிற்கு பெயர் போனது, அரசியல் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கும், தமிழக வளர்ச்சிக்கும் என்னால் முடிந்த நன்மைகளை செய்வேன். மிகவும் பழமையான கலாச்சாரம் கொண்ட தமிழகத்திற்கு ஆளுநராக பொறுப்பேற்று இருப்பது பெருமை அளிக்கிறது என கூறினார். முன்னதாக் அதற்கேற்ப ஆளுநருக்கு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இரண்டு புத்தகங்களை வழங்கினார். 

Chief Minister Stalin's gift to the Governor .. Do you know what it is .. ??

முக்கிய பிரமுகர் சந்திக்கும்போது முதலமைச்சர் புத்தகங்களை பரிசாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார், அந்த வகையில் இன்று ஆளுநராக பதவியேற்று இருக்கும் ஆர்.என் ரவிக்கும் கீழடி தமிழர் நாகரிகம் தொடர்பான புத்தகம் ஒன்றையும், சென்னை வரலாறு  தொடர்பான "மெட்ராஸ்" என்ற (எழுத்தாளர் முத்தையாவால் திருத்தம் செய்யப்பட்ட) புத்தகத்தையும் அவர் பரிசாக வழங்கினார். இரு புத்தகங்களும் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டவை ஆகும். திமுக தோழமை கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில் ஆளுநராக  ஆர்.ன் ரவி பொறுப்பேற்றுள்ள நிலையில் முதலமைச்சர், தமிழ் கலாச்சாரத்தை வலியுறுத்தும் வகையில் புத்தகங்கள் வழங்கி இருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios