Asianet News TamilAsianet News Tamil

ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.. வைரல் வீடியோ !

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடை பயணத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

chief minister stalin inaugurated rahul gandhi bharat jodo yatra
Author
First Published Sep 7, 2022, 4:48 PM IST

இந்தியா முழுவதும் பாரத யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். 

இந்த நடை பயணத்தை இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில் தொடங்கி வடமுனையான காஷ்மீரில் முடிக்க முடிவு செய்துள்ளார்.  அதன்படி இந்த பயணம் தமிழகத்தில் தொடங்கி கேரளா, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், அரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீர் சென்றடைகிறது. 12 மாநிலங்கள் வழியாக 3500 கிலோ மீட்டர் தூரம் ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொள்கிறார். 

chief minister stalin inaugurated rahul gandhi bharat jodo yatra

இதற்கான திட்டமிடல் கடந்த 3 மாதங்களாக நடந்து வந்தது. டெல்லியில் இருந்து கட்சியின் மூத்த தலைவர்கள் உள்பட மாநில காங்கிரஸ் தலைவர் கே. எஸ். அழகிரி என பலரும் கன்னியாகுமரியில் முகாமிட்டு பாத யாத்திரை பயணத்தை ஒருங்கிணைத்து வந்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைபயணத்தை மேற்கொள்கிறார். 

மேலும் செய்திகளுக்கு..ஒன்றிணைவோம் வா.. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் இவர்தான்.! எடப்பாடியா? பன்னீரா? குழப்பத்தில் ர.ரக்கள்

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த நடைபயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், ஹரியாணா, டெல்லி, பஞ்சாப் வழியாக காஷ்மீரை சென்றடைகிறது.  நடைபயணத்தை தொடங்குவதற்கு முன்னர், பூம்புகார் படகுப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான படகில் சென்ற ராகுல், விவேகானந்தர் நினைவு மண்டபம், ராமகிருஷ்ண பரமஹம்சர் சிலை மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டார். குமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைபயணத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 

மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைபயணம் மேற்கொள்ளப்படுகிறது. இதில் கதரால் ஆன தேசிய கொடியை ராகுல் காந்தியிடம் கொடுத்து பாத யாத்திரையை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். மேலும், இதில் இக்கூட்டத்தில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஷ்கர் முதல்வர் பூபேஸ் பாகல் மற்றும் கட்சியின் அகில இந்திய தலைவர்கள், எம்.பி , எம்.எல்.ஏக்கள் கலந்து கொள்கிறார்கள். பொதுக்கூட்டம் முடிந்ததும் ராகுல் காந்தி அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் தங்குகிறார்.

மேலும் செய்திகளுக்கு..பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் - முதல்வர் ஸ்டாலின் எப்போது தொடங்கி வைக்கிறார் ? வெளியான தகவல்!

Follow Us:
Download App:
  • android
  • ios