Asianet News TamilAsianet News Tamil

கோடநாடு கொலை, கொள்ளையை இபிஎஸ் மறைக்க முற்படுவது ஏன்.? சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளியே வரும்-மு.க.ஸ்டாலின்

கோடநாடு விவகாரத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் பேச்சுகளில் முரண்பாடு உள்ளதாக தெரிவித்தவர்,கோடநாடு கொலை, கொள்ளையை அப்போதய முதலமைச்சரே மறைக்க முற்படும்போது திமுக எப்படி அமைதியாக இருக்க முடியும்? எனவும் சிபிசிஐடி விசாரணையில் முழு உண்மையும் வெளிவரும் என கூறினார்.

Chief Minister Stalin has said that the truth will come out in the CBCID investigation regarding the KodaNadu murder case
Author
First Published Apr 21, 2023, 12:51 PM IST | Last Updated Apr 21, 2023, 12:51 PM IST

முதலமைச்சர் ஸ்டாலின் பதிலுரை

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு முதலமைச்சர் பதிலுரையை வழங்கினார். அப்போது பேசிய அவர்,  மக்கள் மனங்களை யாராலும் மாற்ற முடியவில்லை, ஏமாற்றவும் முடியவில்லை, தேர்தலில் மட்டும் வெல்லவில்லை, மக்கள் மனங்களையும் வென்றிருப்பதாக தெரிவித்தார். திமுக தேர்தல் வாக்குறுதி படி 1 கோடி மகளிர் மாதந்தோறும் ரூ.1,000  மகளிர் உரிமைத்தொகை பெற உள்ளதாகவும், மிக மோசமான நிதி நெருக்கடியிலும் மகத்தான திட்டங்களை தமிழ்நாடு அரசு செய்து கொடுத்துள்ளதாகவும் கூறினார்.

இனி தமிழ்நாட்டில் திமுக தான் ஆள வேண்டும் என மக்கள் மனநிறைவுடன் முடிவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். ஆரூத்ரா போன்ற நிதி நிறுவனம் குறித்து மக்களிடம் ஆசையை தூண்டி இது போன்ற நிறுவனங்கள் ஏமாற்றுகின்றன, இத்தகையை நிதிநிறுவனங்களை கண்காணிக்க காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், 

சட்டப்பேரவையில் அமளி..! முதலமைச்சர் ஸ்டாலினின் பதிலுரையை புறக்கணித்து அதிமுக வெளியேறியதால் பரபரப்பு

Chief Minister Stalin has said that the truth will come out in the CBCID investigation regarding the KodaNadu murder case

குண்டு வெடிப்பு- கைது

பொதுமக்கள் எச்சரிக்கையுடன் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். கோட்டையில் அமர்ந்து திட்டங்களை தீட்டினால் போதாது,மக்களுக்கு நெருக்கமாகச் சென்று திட்டங்களை கண்காணிக்க வேண்டும் என்பதற்காக "களஆய்வில் முதலமைச்சர்" என்ற திட்டத்தை தொடங்கியாதகவும் தெரிவித்தார். கோவையில் கடந்த ஆண்டு உக்கடம் பகுதியில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய எதிரிகள் உடனடியாக கைது செய்யப்பட்டதாகவும், 3 நாளில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றியது தமிழ்நாடு அரசு தான் எனவும் தெரிவித்தார். கோவை பாதுகாப்பை கருதி பல்வேறு பகுதிகளில் புதிய காவல்நிலையங்கள் அமைக்கவும், கூடுதல் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தவும் முடிவெடுக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார். மத ரீதியிலான மோதல் இன்றி தமிழ்நாடு அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வருகிறது எனவும் பெருமிதம் தெரிவித்தார். 

Chief Minister Stalin has said that the truth will come out in the CBCID investigation regarding the KodaNadu murder case
துப்பாக்கி சூட்டிற்க்கு உத்தரவிட்டது யார்.?

ஸ்டெர்லைட்க்கு எதிராக 100 நாட்கள் நடந்த அந்த போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு உத்தரவிட்டது யார்?  அதை மட்டும் எதிர்க்கட்சித் தலைவர் ஏன் சொல்லவே மாட்டேன் என்கிறார். முதலமைச்சராக இருந்தபோதும் சொல்ல விரும்பவில்லை இப்போது எதிர்க்கட்சித் தலைவர் ஆன பின்பும் அவர் சொல்ல விரும்பவில்லை. ஆனால், நமது அரசைப் பொறுத்தவரை, துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் பொதுமக்கள் ஒருவர் கூட உயிரிழக்காதவாறு சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு வருகிறது. 12.07.2022 அன்று கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து நடந்த தாக்குதல் சம்பவத்தை காவல் துறையினர் திறமையாக கையாண்டதோடு உயிரிழப்பு ஏதும் இல்லாமல் பார்த்துக்கொண்டனரே, அதுவே ஒரு அரசு மக்கள் போராட்டத்தை எப்படி பொறுப்புடன் கையாள வேண்டும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு என தெரிவித்தார்.

Chief Minister Stalin has said that the truth will come out in the CBCID investigation regarding the KodaNadu murder case

கோடநாடு கொலை- உண்மை வெளிவரும்

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பொதுமக்கள், அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியபிறகே அதிமுக அரசு வழக்குப்பதிவு செய்ததாகவும், குற்றப்பிரிவு விசாரணை முறைப்படி நடக்காததால் மீண்டும் போராடி அவ்வழக்கை சிபிஐக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தார்.  இவ்வழக்கில் கைதானவர்களில் அதிமுக இளைஞரணி நிர்வாகியும் ஒருவர் என குறிப்பிட்டவர், திமுக ஆட்சிக்கு வந்ததும் சிபிஐக்கு உதவ பெண் எஸ்.பி.யை அரசு நியமித்துள்ளதாகவும் கூறினார். ஜெயலலிதாவின்  கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களை அவரின் கட்சியின் முதலமைச்சராக இருந்தவரே மறைக்க முற்படுகிறார்  அப்படி நடக்கும் போது திமுக எப்படி சும்மா இருக்க முடியும்?; உறுதியாக சொல்கிறேன் சிபிசிஐடி விசாரணையில் உண்மை வெளிவரும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

அதிமுக கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்தினால் இது தான் நடக்கும்.. செம்மலை எச்சரிக்கை..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios