Asianet News TamilAsianet News Tamil

12 மணி நேர வேலை மசோதா முழுமையாக திரும்பப்பெறப்பட்டது.! விட்டுக் கொடுப்பது அவமானமில்லை, பெருமை - மு.க.ஸ்டாலின்

12 மணி நேர வேலை மசோதாவிற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மசோதாவை நிறுத்தி வைப்பதாக தமிழக அரசு அறிவித்த நிலையில், அந்த மசோதா திரும்ப பெறப்பட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Chief Minister Stalin announcement that the 12 hour work bill has been completely withdrawn
Author
First Published May 1, 2023, 10:31 AM IST

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தில் தொழிலாளர் பணி நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் வகையில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அந்த மசோதாவிற்கு அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தது. 12 மணி நேர வேலை என்பது அனைவருக்கும் இல்லையென தெரிவித்த தமிழக அரசு, விருப்பப்பட்டவரகள் மட்டும் செய்யலாம் என கூறியது, மேலும் 4 நாட்கள் வேலை செய்து விட்டு 3 நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இருந்த போதும் இந்த மோசாதா தொழிலாளர்களுக்கு எதிராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. தொழிலாளர்களின் உழைப்பு இந்த மசோதா சுரண்டுவதாகவும் கூறப்பட்டது . இதனையடுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

Chief Minister Stalin announcement that the 12 hour work bill has been completely withdrawn

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது. மேலும் திமுக கூட்டணி கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தது.இதனையடுத்து தமிழக மூத்த அமைச்சர் தொழிற்சங்க நிர்வாகிகளோடு ஆலோசனை மேற்கொண்டு அந்த கருத்தை முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இதனையடுத்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில், ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள், இச்சட்டமுன்வடிவினை நடைமுறைப்படுத்தினால் தொழிலாளர்களுக்கு ஏற்படக்கூடிய சிக்கல்கள், சிரமங்கள் குறித்து விவரமாக எடுத்துரைத்து, தங்களுடைய கருத்துக்களை அரசு பரிசீலிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டனர். அந்த வகையில்,

Chief Minister Stalin announcement that the 12 hour work bill has been completely withdrawn

சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது  பல்வேறு தொழிற்சங்கப் பிரதிநிதிகள், அரசியல் கட்சிகள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில், 12 மணி நேர வேலை  சட்டமுன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.இந்தநிலையில் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே தின பூங்காவில் உள்ள மே தின நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்டை அணிந்து சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தொழிளார்கள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  

Chief Minister Stalin announcement that the 12 hour work bill has been completely withdrawn

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 12 மணிநேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக ஏப்ரல் 24-ந் தேதி அறிவித்திருந்தோம்.
இந்தநிலையில் 12 மணி நேர வேலை மசோதா முழுமையாக திரும்பப் பெறப்படுவதாக தெரிவித்தார்.  இந்த சட்ட  மசோதா திரும்பப் பெறப்பட்டது பற்றி அனைத்து சட்டசபை உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கப்படும் என கூறினார். இந்த சட்ட மசோதாவிற்கு மற்ற தொழிறசங்கங்கள் மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை திமுகவின் தொழிற்சங்கமான தொமுசாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறினார். இது திமுகவின் ஜனநாயகத் தன்மையை காட்டுகிறது. விட்டுக் கொடுப்பதை நான் அவமானமாக கருதவில்லை. பெருமையாகவே கருதுவதாக கூறினார். 

Follow Us:
Download App:
  • android
  • ios