தென்மாவட்டத்தில் கொரோனா ஆய்வு பணிகள் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணி மேற்கொள்ளும் போது இதுவரைக்கும் 3முறை பயணம் ரத்து செய்யப்பட்டு திடீர் திடீரென கிளம்பினார் முதல்வர் பழனிச்சாமி. ஆய்வு பயணத்தில் இருக்கும் போதே பயணம் ரத்து செய்யப்பட்டது.இந்தநிலையில் 4வது முறையாக தூத்துக்குடிக்கு ஆய்வு செய்ய முதல்வர் வர இருக்கிறார். சென்டிமென்டாகவே தூத்துக்குடி நாகர் கோவில் பயணம் சரியில்லை என்பதால் திருவனந்த புரம் வழியாக நாகர்கோவில் வந்து தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து வரும் 10, 11ம் தேதி தென் மாவட்டங்களில் முதல்வர் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். கொரோனா தடுப்பு பணிகள் குறித்து தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களுக்கு கடந்த மாதமே முதல்வர் ஆய்வுப்பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக முதல்வர் வேட்பாளர் பிரச்னை பெரிய அளவில் நடந்துகொண்டிருந்ததால் இந்த மாவட்டங்களில் கடந்த மாதம் நடைபெற இருந்த ஆய்வுப்பணிகள் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, அக்டோபர் முதல் வாரம் இந்த மாவட்டங்களில் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ள இருந்தார். ஆனால், முதல்வரின் தாயார் மரணம் அடைந்ததால் ஆய்வுப்பணி 2வது முறையாக ரத்து செய்யப்பட்டது.


இதனால், 3வது முறையாக கடந்த 29ம் தேதி தூத்துக்குடி செல்ல திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்ததை தொடர்ந்து மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் நவ.10-ம் தேதி கன்னியாகுமாரியிலும், 11-ம் தேதி தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்திலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு மேற்கொள்ள உள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து 3 மாவட்ட அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்கிறார்.