chief minister palanisamy consult with transport minister and officers

போக்குவரத்து ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடர்பாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செயலர் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி தலைமை செயலகத்தில் ஆலோசித்து வருகிறார்.

13வது ஊதிய ஒப்பந்தத்தில் 2.57% ஊதிய உயர்வு கோரி போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை 2.44% என்ற ஊதிய உயர்வு வழங்குவதாக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அதை ஏற்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சில மறுத்துவிட்டன. சில சங்கங்கள் ஒப்புக்கொண்டன. ஆனால், வேலைநிறுத்தம் தொடர்ந்து வருவதால் மக்களும் பயணிகளும் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தமிழகம் முழுவதும் வெறும் 20% பேருந்துகள் மட்டுமே இயங்குகின்றன. இதனால் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்வோர் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே பலகட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித முடிவும் எட்டப்படாத நிலையில், நேற்றைய பேச்சுவார்த்தையும் உடன்பாடு எட்டப்படவில்லை. இந்நிலையில், பிரச்னையை முடிவுக்கு கொண்டுவருவது தொடர்பாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், செயலர் மற்றும் உயரதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமை செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற்றுவருகிறது.