சட்டப்படி கடமைகள் செய்து தமிழகத்திற்கு பெருமை சேருங்கள்.! சி.பி ராதாகிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்த ஸ்டாலின்

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன்,அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Chief Minister M K Stalin has congratulated CP Radhakrishnan on his assumption of office as the Governor of Jharkhand

ஆளுநராகிறார் சி.பி.ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக மூத்த தலைவர்களாக இருந்த தமிழிசை தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். மணிப்பூர் ஆளுநராக இல. கணேசன் நியமிக்கப்பட்டனர். இந்த நிலையில் பாஜக மூத்த தலைவரும், தேசிய கயிறு வாரியத்தின் தலைவராக இருந்த சி.பி,ராதாகிருஷ்ணனை ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

முதலமைச்சர் வாழ்த்து

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராகப் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நண்பர் சிபி ராதாகிருஷ்ணனுக்கு  நெஞ்சார்ந்த வாழ்த்துகள்! அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனது கடமைகளை நிறைவேற்றி தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்திட விழைகிறேன் என பதிவிட்டுள்ளார். 

இதையும் படியுங்கள்

பாஜக மூத்த தலைவர் சி.பி ராதாகிருஷ்ணன் ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமனம்

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios