அதிமுக என்ற இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வோம் எனவும் மக்களைவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். 

அதிமுக பிளவு அணிகளாக இருந்தபோது ஒபிஎஸ் அணி, இபிஎஸ் அணி, டிடிவி அணி என தனித்தனியாக எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவி கொண்டாடி வந்தனர். 

ஆனால் ஒபிஎஸ் அணியும் இபிஎஸ் அணியும் ஒன்றாக இணைந்த பிறகு தற்போது ஒரு அணியாக நூற்றாண்டு விழாவை கொண்டாடி வருகின்றனர். 

அதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் ஒரே மேடையில் அமர்ந்து உரையாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், தற்போது வேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடைபெற்று வருகின்றது. இதில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு பேசினார். 

அப்போது, அதிமுக என்ற இயக்கத்தை யாராலும் அழிக்க முடியாது எனவும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை முழுமையாக நிறைவு செய்வோம் எனவும் தெரிவித்தார். 

மேலும், ஆட்சியை கலைக்க வேண்டும் என நினைப்பவர்களின் திட்டம் நிறைவேறாது எனவும் பேசினார்.