chief minister edappadi pazanisamy wrote a letter to pm modi regarding coimbatre government press
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சென்னையில் இருந்து கொண்டு கடிதம் எழுதியே பல காரியங்களை சாதித்துக் கொண்டார். எந்தப் பிரச்னைக்கும் உடனே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி விடுவார். இது அவ்வப்போது எதிர்க்கட்சிகளால் விமர்சனம் செய்யப்பட்டு, சர்ச்சைக்கு உள்ளானாலும், சில நேரம் நன்மையும் நடக்கும்.
அந்த பாணியில், முதல்வர் பழனிசாமி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், கோவையில் உள்ள மத்திய அரசின் அச்சகத்தை தொடர்ந்து நடத்த வேண்டும். மூடும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.
மேலும், இந்திய அரசு அச்சகம் குறித்த விவகாரத்தில், கடந்த செப்.28ம் தேதியிட்ட கடிதத்தையும், வீட்டு வசதித்துறை அமைச்சர் நவ.15ம் தேதியிட்ட கடிதத்தையும், பதில் அளிக்கப்பட்ட நவ.7, நவ23ம் தேதியிட்ட கடிதத்தையும் நினைவு படுத்துகிறேன்.
அச்சகத்தை மூடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இங்கு 4 ஆண்டுகளுக்கான பணியாணைகள் உள்ளன. 132.7 ஏக்கரில் உள்ள அச்சகத்தில் திறன்மிக்க பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து நடத்துவதே மிகவும் சிறந்த முடிவு.
கர்நாடகா, கேரளாவில் உள்ள அச்சகங்களை கோவையுடன் இணைக்க வேண்டும். இந்த இணைப்பின் மூலம் தென்னிந்தியாவில் ஒரே அரசு அச்சகமாக கோவை அச்சகம் திகழும். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்ற்யு கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
