Asianet News TamilAsianet News Tamil

தலைமைச்செயலகம் கட்டிட ஊழலை தோண்ட போகிறோம்! சும்மா விட மாட்டோம் என எடப்பாடி பழனிச்சாமி ஆவேசம்!

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முகாந்திரம் இருந்தால் விசாரிக்க உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அது குறித்து தோண்டப்போவதாகவும் நாங்கள் ஒன்றும் செய்யாதபோதே இந்த நோண்டு நோண்டுகிறீர்களே.

Chief Minister Edappadi Palinasami warned DMK
Author
Tamil Nadu, First Published Sep 26, 2018, 5:37 PM IST

புதிய தலைமை செயலகம் கட்டியதில் முகாந்திரம் இருந்தால் விசாரிக்க உயர்நீதிமன்றம் கூறியுள்ள நிலையில் அது குறித்து தோண்டப்போவதாகவும் நாங்கள் ஒன்றும் செய்யாதபோதே இந்த நோண்டு நோண்டுகிறீர்களே... நீங்கள் எவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கிறீர்களே. விடுவார்களா மக்கள்? என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசியுள்ளார்.  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை கடுமையாக சாடியுள்ளார். Chief Minister Edappadi Palinasami warned DMK

சேலத்தில் அதிமுக சார்பில் பொதுக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது: நீங்கள் தேடி கண்டுபிடித்தாலும் குற்றமே அதிமுக அரசில் கண்டுபிடிக்கவே முடியாது. ஆனால் நீ தோண்ட சொல்லிவிட்டாய், நாங்கள் தோண்டப் போகிறோம். புதிய தலைமைச் செயலகம் கருணாநிதி கட்டினார். அம்மாதான் ஒரு விசாரணை கமிஷனை வைத்திருந்தார், அந்த விசாரணைக் கமிஷனைக்கூட நீதிமன்றம் ரத்து செய்துவிட்டது. 

அந்த புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு உள்ள டெண்டரை எடுத்துப் பார்க்கும்பொழுது, 8 பேர் கலந்து கொள்கிறார்கள், அந்த எட்டாவது பேர் 29 சதவீதம் அதிகப்படுத்தி போடுகிறார். அந்த டெண்டரின் மதிப்பு 200 கோடி. மூன்று மாதங்கள் கழித்து 1,30,000 சதுர அடியை சேர்த்து கட்ட வேண்டுமென்று சொல்கிறார். முதல் 8 லட்சம் சதுர அடிக்கு 200 கோடியில் 29% அதிகப்படுத்தி ஒருவருக்கு டெண்டர் கொடுத்து விட்டார்கள். அவருக்கே மூன்று மாதம் கழித்து, அந்த கட்டடத்தை 9 லட்சத்து 30 ஆயிரம் சதுர அடியாக கட்டவேண்டும் என்று சொல்லி, அந்த 200 கோடியை 465 
கோடியாக ஆக்கியிருக்கிறார். வசமாக மாட்டப் போகிறீர்கள். Chief Minister Edappadi Palinasami warned DMK

அம்மா இருக்கும்பொழுது இதில் ஊழல் நடந்திருக்கிறது என்று அமைத்த ஆணையத்தை, கருணாநிதி அந்த வழக்கை அந்த ஆணையம் விசாரிக்கக் கூடாது என்று 6 வருடமாக தடையாணை வாங்கி வைத்திருந்தார். இப்பொழுது, முகாந்திரம் இருந்தால் நீங்கள் வழக்கு தொடரலாம் என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லியிருக்கிறது. Chief Minister Edappadi Palinasami warned DMK

விசாரணை கமிஷன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரத்தில் நீதிமன்றம் புது உத்தரவை போட்டிருக்கிறது. நீங்கள் அதை விசாரியுங்கள், விசாரணையில் அது குற்றம் என்றிருந்தால் அதற்குண்டான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்கள். இனிமேல் தான் தெரியப்போகிறது. நாங்கள் ஒன்றும் செய்யாதபோதே இந்த நோண்டு நோண்டுகிறீர்களே, நீங்கள் இவ்வளவு பெரிய தப்பு செய்திருக்கிறீர்களே விடுவார்களா மக்கள்? நான் விட்டாலும் இந்த மக்கள் விடமாட்டார்கள் என எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

Follow Us:
Download App:
  • android
  • ios