Asianet News TamilAsianet News Tamil

உலகையே பீதியடைய செய்துள்ள பிரிட்டன் கொரோனா.. மருத்துவ வல்லுனர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை.

திய தளர்வுகள் அமல்படுத்துவது குறித்தும் மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Chief Minister Edappadi Palanisamy has consulted with a group of medical experts.
Author
Chennai, First Published Dec 28, 2020, 2:41 PM IST

மாவட்ட ஆட்சியர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தை தொடர்ந்து தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு படிப்படியாக தளர்வுகள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது புதிதாக பரவி வரும் பிரிட்டன் கொரோனா வைரஸ் உலகையே பீதியடைய செய்துள்ளது.  

Chief Minister Edappadi Palanisamy has consulted with a group of medical experts.

இதனை எதிர்கொள்வது குறித்தும், வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், புதிய தளர்வுகள் அமல்படுத்துவது குறித்தும் மற்றும் மேற்கொள்ள வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்தும்  மருத்துவ வல்லுனர்கள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 

Chief Minister Edappadi Palanisamy has consulted with a group of medical experts.

இந்த ஆலோசனை கூட்டத்தில் வல்லுனர்கள் குழு கொடுக்கும் பரிந்துரைகளையும், மாவட்ட ஆட்சியர்கள் கொடுத்த பரிந்துரைகளையும் ஆய்வு செய்து அரசு அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

 

Follow Us:
Download App:
  • android
  • ios