இதெல்லாம் பெரிய விஷயமா? நான் சொன்னால் சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் போஸ்டர் ஓட்டுவார்கள்.. CV. சண்முகம்..!
நான் சொன்னால் சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் போஸ்டர்கள் ஒட்டுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.
நான் சொன்னால் சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் போஸ்டர்கள் ஒட்டுவார்கள் என சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசமாக பேசியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை நிறைவடைந்ததை அடுத்து, கடந்த 27ம் தேதி விடுவிக்கப்பட்டார். இருப்பினும் உடல் நலக் குறைவு காரணமாக அவர் பெங்களூரு விக்டோரியா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த சிலர் சசிகலாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டுடன் கருத்து தெரிவிப்பது, போஸ்டர் அடிப்பது, முகநூல் பதிவு வெளியிடுவது போன்றவற்றில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் அனைவரும் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் சசிகலாவுக்கு ஆதரவாக முன்னாள் எம்.எல்.ஏ ரகுபதி போஸ்டர் ஒட்டியது பற்றிய கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், ''அதிமுகவினர் சசிகலாவை வரவேற்று போஸ்டர் அடிப்பது என்பது ஒரு பெரிய விஷயமா? நான் கூறினால் நாளைக்கே சசிகலாவுக்கு எதிராக ஒரு லட்சம் பேர் போஸ்டர் ஒட்டுவார்கள் என ஆவேசமாக பேசியுள்ளார்.