Asianet News TamilAsianet News Tamil

4 நாட்களுக்கு முன்பு 4 மாணவிகள் தற்கொலை - முதலமைச்சர் இரங்கல்... ரூ. 2 லட்சம் நிதியுதவி..!

Chief Minister Edappadi Palanisamy condoled to the families of 4 schoolchildren who committed suicide by jumping into the well.
Chief Minister Edappadi Palanisamy condoled to the families of 4 schoolchildren who committed suicide by jumping into the well.
Author
First Published Nov 27, 2017, 8:19 PM IST


வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

கடந்த 24ம் தேதியன்று அரக்கோணம் அருகே பணப்பாக்கத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த தீபா, மனிஷா, சங்கரி, ரேவதி ஆகிய 11-ம் வகுப்பு மாணவிகள் நான்கு பேர் விவசாயக் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர். 

ஆசிரியைகள் திட்டியதுதான் அவர்களின் தற்கொலைக்கு காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியை ரமா, ஆசிரியை மீனாட்சி சுந்தரேஷ்வரி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதைதொடர்ந்து தற்காலிகப் பணியாற்றி வந்த லில்லி, சிவகுமாரி ஆகிய ஆசிரியைகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

இந்நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவிகள் 4 பேரின் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவிகள் இறப்பு குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியாளருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios