Asianet News TamilAsianet News Tamil

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அதிரடி நடவடிக்கை வரவேற்கத்தக்கது... ராமதாஸ் பாராட்டு..!

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சட்ட முன்வரைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Chief Minister Edappadi Palanisamy action is welcome...ramadoss
Author
Tamil Nadu, First Published Sep 15, 2020, 6:27 PM IST

மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு தாக்கல் செய்துள்ள சட்ட முன்வரைவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;- தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் 7.5% விழுக்காடு மாணவர் சேர்க்கை இடங்களை அரசு பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்குவதற்கான சட்ட முன்வரைவு பேரவையில் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. தமிழக அரசின் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

Chief Minister Edappadi Palanisamy action is welcome...ramadoss

இதே நோக்கத்திற்கான தமிழக அரசின் அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் 3 மாதங்களாக ஆளுநர் முடக்கி வைத்திருந்தார். இந்த சட்டத்திற்கும் அதேநிலை ஏற்பட்டு விடக்கூடாது.  இந்த சட்டத்தை நடப்பாண்டிலேயே செயல்படுத்த வசதியாக ஆளுநர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios