முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திமுக தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சந்தித்து துக்கம் விசாரிக்க இருக்கிறார்.

முதல்வரை சந்தித்து அவரின் தாயார் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் பழனிசாமி இல்லத்தில் நிகழும் இந்த சந்திப்பில், ஸ்டாலின் முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் காலமானதையொட்டி நேரில் சந்தித்து ஆறுதல் கூறுகிறார் மு.க.ஸ்டாலின்.எடப்பாடி பழனிச்சாமி தாயாரின் மறைவையொட்டி கடந்த ஒருவார காலமாக சேலம் இல்லத்தில் இருந்த முதல்வர் பழனிசாமி நேற்றிரவு சென்னை திரும்பினார்.

   கடந்த வாரம் முதல்வர் தாயார் தவுசாயம்மாள் மாரடைப்பால் காலமானார். அவரின் இறுதி சடங்கு சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. முதல்வரின் தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.