சட்டசபையில் ஆட்சியை காப்பாற்ற 8 எம்.எல்.ஏக்கள் உதவி வேண்டும் என்ற நிலையில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.

நாளை நடைபெறும் நம்பிக்கை கோரும் வாக்கெடுப்பில் காங்கிரஸ் திமுக ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் எதிர்த்து வாக்களிக்கும் நிலையில் மீதமுள்ள 124 எம்.எல்.ஏக்களில் 117 பேர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாக்களிக்க வேண்டும்.

பாட்சா படத்தில் வரும் எட்டு எட்டா மனுஷன் வாழ்வை பிரிச்சிக்கோ, எட்டுக்குள்ள உலகம் இருக்குனு தெரிஞ்சிக்கோ என ரஜினிகாந்த் பாடுவார். அதுபோன்று நாளை எடப்படிக்கு எட்டு எம்.எல்.ஏக்கள் தான் எதிர்காலம். அவர்கள் கைவிட்டால் கதை முடிந்துவிடும்.